ஒளியூரில்
65
என்று ஏன் கேட்கப் போகிறான்! அவன் உள்ளத்தை “முத்து வைத்த நற்பவழப் பெட்டி” கவர்ந்துவிட்டது!
“அங்கே சென்று, நட்சத்திரங்களை எல்லாம் எடுத்துப் பூப்பந்துகளாக்கி விளையாடினால் எப்படி இருக்கும்?”—என்று குழந்தை போலக் கேட்டாள் மல்லிகா; குறும்புப் புன்னகையுடன், ராமப்பிரசாதன், “அங்கு நீ சென்றால், தேவலோகத்திலே பெரும் போரல்லவா மூண்டுவிடும்” என்பான்.
“அங்கு போர் எழ என்ன காரணமிருக்கிறது? இங்கு தான் புத்தமார்க்கத்துக்கும் புராதன மார்க்கத்துக்கும் போர் மூண்டு கொண்டிருக்கிறது என்கிறார்கள். அங்கு போர் எழ என்ன காரணம்?” என்று அவள் கேட்க, “அன்பு மலரே! அமரர் உலகிலே நீ சென்றால், எனக்கா உனக்கா என்று அவர்களுக்குள் போட்டி கிளம்பி பெரும் போர்மூண்டு விடாதோ!” என்று அவன் குறும்பாகச் சொன்னான்.
“எனக்கென்ன அச்சம் அதனால்!” என்கிறாள் வாசா. பயந்து போகிறான் ராமப்பிரசாதன்! கோபமாகக்கூட இருக்கிறது. “அதென்ன மல்லிகா, அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்கிறான். “ஏன்! அமரர்கள், என் பொருட்டுப் போரிட்டுக் கொண்டால் எனக்கென்ன? அமரர்க்கரசனே குறுக்கிட்டாலும் புறமுதுகிட்டோடச் செய்து என்னை உம்மவளாக்கிக் கொள்ளும் என் ஆற்றலரசர் இருக்கும்போது எனக்கென்ன அச்சம்?” என்று அவள் கூறுவாள்; வாரி அணைத்துக் கொள்வான்; அவர்கள் காலடியில் மகதம், மாளவம், கூர்ஜரம், மாரடம், வங்கம்...எல்லாம் உருண்டோடும்; விண்ணகத்து மண்டலங்களை எல்லாம்கூடக் கடந்து, அவர்கள். காதல் உலகு செல்வர்—கண்களைத் திறந்தாலோ, பசும் புற்றரையும். பழமுதிர் சோலையும், நீரூற்றும், இது கலிங்கம் என்பதை நினைவிற்குக் கொண்டுவரும்.
பண்டிதர் பொருள் தேடிட எந்த மண்டலம் சென்றும் பயனில்லை என்று அறிந்திருந்தார்; ஆனால் சம்பந்தி-
பூ-159-பி-3