76
ஒளியூரில்
“அனுப்பிவிட்டதைச் சொல்லத்தான் வந்தேன், கண்ணே!”
“அப்பா, குளிர் காலத்தில் காஷ்மீர் கம்பளம், நல்ல தல்லவா?”
“ஆமாம், மகளே! உன்னிடம் ஒரு உயர்தரமான கம்பளம் உண்டே?”
“எனக்கல்லப்பா? எனக்கென்ன—வாலிபம்தானே! சதா சிந்தனையில் மூழ்கியிருக்கும் நலந்தா நல்லவர்களுக்கு குளிரால், பாபம், எவ்வளவு கஷ்டமோ...”
“என்னம்மா செய்வது? கொடியவனெல்லாம் கோட்டையிலும், அரண்மனையிலும் தங்கி, கோடையிலே பூங்காற்றும், குளிர் காலத்தில் வெப்ப வசதியும் தேடிக் கொள்ள முடிகிறது. அவர்கள் என்ன செய்வார்கள் பாபம். ஆண்டிகள்தானே!”
“அதனால்தான், ஐயாயிரம் காஷ்மீர் சால்வைகளை வரவழைக்க ஏற்பாடு செய்துவிட்டேன்.”
“அருமை மகளே, என்ன மேலான எண்ணம் உனக்கு.”
இவ்விதம், தந்தையுடன் போட்டியிட்டுக் கொண்டு வளர்ந்துவிட்டாள் மல்லிகா.
ஆண்டு மூன்றாயிற்று! எந்த ஆரணங்கும், ராமப்பிரசாதன் கண்வழி நுழைந்து நெஞ்சில் பதியவில்லை—அவனுடைய செவியில், எத்தனையோ சீமாட்டிகளைப் பற்றிப் போட்டு வைத்தார், பண்டிதர்; பணம் இல்லை. எல்லாவற்றையும் இழந்துவிட்ட நிலையில் இருந்தான் பிரசாதன்; ஆனால் தன் தகப்பனாரை, மல்லிகாவே துச்சமாக மதிக்கிறாள் என்று எண்ணிக் கொண்டதால் ஏற்பட்ட ஆத்திரம் மட்டும் அடங்கவில்லை. மல்லிகா இல்லாத நேரத்திலெல்லாம், மலர்வனம் செல்வான்; அவளை எண்ணிக் கொள்வான்; அவளுக்காக ஏறிக் கனிபறித்த மரங்களைக் கட்டித் தழுவிக் கொள்வான்; அவள் பொருட்டு பயிரிட்ட மலர்ச் செடிகளுக்குக் கண்ணீரை ஊற்றுவான் - பித்தம் பிடித்தவன் போலானான்.