ஒளியூரில்
77
“பிரசாதா! நாம் இருவருமே பெருந்தவறு செய்து விட்டோம்...” என்கிறார் பண்டிதர் ஒரு நாள்
ராமப்பிரசாதன் திகைத்துப் போனான்.
“அந்தப் பெண்ணை நேற்று பார்த்தேன்—எலும்பும் தோலுமாக இருக்கிறாள்” என்றார்.
“ஆமாப்பா! அதனால்தான் அவர்கள் ஆறு கிராமத்துக்குச் சொந்தகாரர்கள் என்று தெரிந்ததும், நான் அந்தச் சம்மந்தம் வேண்டாம் வேண்டாம் என்று கூறினேன்.”
“ஓஹோ! நான் ஒயிலூர் சீமான் மகளைப் பற்றிச் சொல்வதாக எண்ணிக் கொண்டாயோ! நான் பாபம், வாசமல்லிகாவைப் பற்றி அல்லவா கூறுகிறேன். உன் நினைவே அவளைச் சித்திரவதை செய்கிறது. நீ மட்டுமென்ன, துரும்பாகிவிட்டாய். நான் ஏன் இந்தப் பாபத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்? ஸ்வாமிகளும், காதலருக்குத் தடையாக இருப்பது, எல்லாப் பாபத்திலும் கொடியது என்கிறார். ஆகையால்...”
“ஆகையால் என்னப்பா?”
“நாளைக்கே சென்று பூபதியாரிடம் குழந்தைகளின் மனோபீஷ்டம் நிறைவேறட்டும் என்று கூறிவிடப் போகிறேன்.”
“அப்பா...”
“அன்பே!”
“ஆருயிரே!
எனக்குத் தெரியும்
எத்தனை நாட்கள்?
எங்கே ஒளிந்திருந்தது இந்தக் காதல்?
நீண்ட காலத்துக்குப் பிறகு இந்தக் கனிரசம்?”