உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

ஒளியூரில்

மதத்தாரின் பாசறை என்றார்களே—சுடுகாடு ஆகப்போகிறது, நாளைக்கு. உத்தமனே! எல்லாச் செம்மரத் தூண்களிலும் நான் கொடுத்த ‘பொடி’ சேர்த்துவிட்டாயல்லவா, தவறாமல்?”

“ஒவ்வொன்றிலும்—தாங்கள் சொன்ன அளவு! ஒவ்வொரு நாளும் அடிமடி நிறையக் கட்டிக்கொண்டு போயல்லவா, தூண்களின் துவாரத்தில் தூவிவிட்டு வந்தேன்.”

“அவனுக்குத் துளியும் சந்தேகம் எழவில்லையே...?”

“ஏமாளிதானே! என் மகன், வாசமல்லிகாவுடன் காதல் நாடகமாடினானே, அதைக் கண்டே நம்பிவிட்டான்”

“ராமப்பிரசாதன் அறிவானோ?”

“இல்லை, ஸ்வாமிகளே! சிறுவன், மேலும் இளகிய மனம்! இந்தக் காரியத்தை அவன் சதி, சண்டாளத்தனம், கொலை பாதகம் என்று எண்ணிக் கொள்வான். என் சொல்லையும் மீறுவான். நமது இரகசிய ஏற்பாடு அவனுக்குத் துளியும் தெரியாது...அப்படி நடந்து கொண்டேன்...”

“ஒரு மண்டலாதிபதிக்கு இருக்க வேண்டிய மதிநுட்பம் உனக்கு இருக்கிறது ரங்கராஜா. உம்! இருக்கட்டும். நீயே ஒரு மண்டலாதிபதியாக முடியாதா என்ன? ஐயன், நீ செய்துள்ள சேவைக்கு அருள் பாலித்தாக வேண்டுமே...”

“ஸ்வாமி! யாக குண்டத்து நெருப்பு, செம்மரத் தூண்களிலே பாய்ந்து, செம்மரத் தூண்களிலே உள்ள ‘அரக்குப் பொடி’யினால் நாசம், வெள்ளம் போலப் பாயும்...அதிலே ஏதும் தங்கு தடையிராதே...?”

“ஒரு துளியும் இல்லை. நிச்சயமாக, நாளைய தினம் நலந்தா சர்வ நாசத்தில் சிக்கப் போகிறது. அதனாலேயே, நானும், மற்றும் சில ஆரியோத்தமர்களும் வெளியேறிவிட்டோம்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/80&oldid=1769833" இலிருந்து மீள்விக்கப்பட்டது