உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிடி சாம்பல்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளியூரில்‌

79

“செம்மரச் சிங்காரக்கூடம் அமைந்து, அதிலே ‘சீலம்’ குறித்து, சிறப்புரை நிகழ்ந்தானதும் திருமணம் என்று கூறப்பட்டதால், ஒவ்வொரு தூண் முடிவதும், உள்ளத்துக்கு மகிழ்ச்சியூட்டிற்று, காதலருக்கு.”

நாளையோடு தீர்ந்தது; நாசகாலர்கள் ஒழிவார்கள்”

பிரசாதன், இந்தப் பேச்சுக் கேட்டதும், திடுக்கிட்டு போனான். ஸ்வாமிகள் அல்லவா, பேசுகிறார்! உற்றுக் கேட்டிடலானான்.

“ரங்கராஜா! நீ ஆரிய மார்க்கத்துக்குச் செய்துள்ள சேவை, மகத்தானது. மனு மாந்தாதா காலத்திலே ஆரியம் செழித்தது—இப்போது அழிய இருந்த ஆரிய மார்க்கத்தைக் காப்பாற்றும் பெரும்பாக்கியம் உன்னைச் சேர்ந்தது. உத்தமனே! உன்னை நண்பனாக அடையப்பெற்ற நானே பாக்கியசாலி”

“என்னால் என்ன ஸ்வாமி! எல்லாம் தாங்கள் காட்டிய வழி நடந்தேன்; இட்ட கட்டளையை நிறைவேற்றினேன். என்னால் என்ன சாதிக்க முடியும்?”

“உன்னால் என்ன சாதிக்க முடியும் என்றா கேட்கிறாய்? நலந்தா வெந்து சாம்பலாகப் போகிறதே நாளைக்கு, யாரால்? உன் கைங்கரியமல்லவா இது? தூள் தூளாகப் போகிறது, அவர்கள் கட்டி வைத்துள்ள மாடங்களும், கூடங்களும்! நலந்தாவிலே கிளம்பப் போகும் ‘ஜ்வாலை’ நெடுந்தொலைவு தெரியும்—நெடுந்தொலைவு கற்கள் பிளந்து நாலா பக்கமும் பறக்கும்; கட்டிடங்கள், சடசடனெச் சரியும்...”

“ஸ்வாமி! அந்தப் புத்தப் பண்டாரங்கள்...”

“அவர்களா? ஆரியத்தை அழித்தொழிக்க முனைந்த அந்த அசுரர்களா? கட்டிடத்தின் அடியிலே சிக்குண்டு சிலர், நெருப்பிலே பலர், இடிபாட்டுக்கடியிலே சிலர்—இப்படிச் செத்துத் தொலைவார்கள். பிணக் குவியல்! நலந்தா, புத்த-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிடி_சாம்பல்.pdf/79&oldid=1769773" இலிருந்து மீள்விக்கப்பட்டது