உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிணங்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

பிணங்கள்


செய்யும் அரும்பணியை அரசியல்வாதி நாகராஜன் ஆட்சேபித்தால்… உலகம் சிரிக்காதா?

“நாயகியின் தந்தையா தங்கராயர்? தங்கராயரால், சுவீகாரம் செய்யப்பட்டவள்தானே நாயகி? அப்படியிருக்க, தங்கராயர் பிற புருஷனே தவிர, பெற்ற தகப்பனல்ல!” இந்த எண்ணம் நாகராஜன் மனதில் இருந்து என்ன பயன்? மெல்லவும், விழுங்கவும் முடியாமல் விழித்தான். கட்டிய மனைவி சதா சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டு, எட்டியே இருப்பதைக் கண்டு வருந்தினான்; வாடினான்.

இந்த வேதனையின் காரணமாகத்தான், அரசியலில் அதிகமாக ஈடுபடுவதை நிறுத்தினான். ஆடிக்கொரு தரம், அமாவாசைக்கொரு தரம் என்பதைப் போல, எப்போதாவது, எங்காவது கட்டாயத்தின் பேரிலே செல்வான்.

அப்படி அவன் சென்று கொண்டிருந்த போது, ஒரு செய்தியைக் கேட்டுத் திடுக்கிட்டான். மனம் பதறினான். காற்று வாக்கிலே வந்த செய்திதான் அது; ஆனால், கர்ண கொடூரமானது! வதந்திதான்; ஆனால், வாழ்க்கையைப் பாதிக்கக் கூடியது.

“ஏண்டா! தங்கராயரும், நாயகியும் என்னதான் ‘அப்பா, மகள்’ என்றாலும்… தங்கராயர் மடியிலே நாயகி கிடப்பதும்… ஒரே கட்டிலில் இருவரும் படுப்பதும்… சேச்சே… பிரசங்கம் செய்ய வந்த இடத்தில், இந்த லீலாவிநோதமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிணங்கள்.pdf/91&oldid=1743020" இலிருந்து மீள்விக்கப்பட்டது