பிணங்கள்
91
இந்தச் செய்தி நாகராஜனுக்கு அதிர்ச்சியாக இருந்தது; பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது. இந்த உண்மையை எப்படி அறிவது? அதுவும் காற்று வாக்கிலே வரத்தான் செய்தது.
இந்த நாயகியை ‘தத்து’ எடுத்தவன் தங்கராயர்; படிக்க வைத்து வளர்த்தவன் அவன்தான். நாயகி பருவமடைந்ததும், வீட்டோடு அவளை வைத்துக் கொண்டு, தந்தை—மகள் நாடகம் நடத்தியவன்தான் தங்கராயர். உண்மையிலேயே, தங்கராயரும், நாயகியும் அந்தரங்கக் காதலர்கள். பன்னிரண்டாவது வயதிலேயே, நாயகியைக் கெடுத்து விட்டானாம் பாவி!
இவ்வளவு அறிந்த பின்னும், மானமுள்ளவன் சும்மா இருப்பானா? பொதுக் கூட்டங்களுக்கே போகக் கூடாது என்று உத்தரவு போட்டான். தங்கராயர் இருக்கிற பக்கம் தலை வைத்து படுக்கக் கூடாது என்றான். பி.ஏ.பி.எல். படித்த வக்கீல் நாயகி, இதற்கெல்லாம் வளைவாளா?
“சந்தேகம், சந்தோஷ வாழ்வின் சத்ரு” இப்படி வேதாந்தம் பேசினாள் நாயகி. ஆனால்… நாயகி பப்ளிக் பிராசிகூட்டராக நியமிக்கப்பட்டாள். அதற்கப்புறம், அவள் கட்சி பிரசாரத்திற்கு போக முடியவில்லை.
இதனால், நாகராஜன் திருப்தி அடைந்தானா? எப்படி அடைய முடியும்? கோர்ட் விஷயம் என்று கூறிக் கொண்டு, வீட்டுக்கே வராமலிருந்தாள், நாயகி; கணக்-