உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பிணங்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

பிணங்கள்


கற்ற ஆண்களோடு, கண்ட கண்ட இடங்களிலே, சுற்றித் திரிந்தாள். கண்டித்துக் கேட்டால்… வழக்குக்கு வேண்டியவர்கள் என்று பதில் சொன்னாள்.

இதைக் கூட கொஞ்ச நாள் பொறுத்தே வந்தான். ஆனால், அன்று இரவு அவன் கண்ட காட்சி…

எவனோ கல்லூரியிலே கூடப் படித்தவனாம், நாயகியைக் கட்டி அணைத்து, முத்தமிட்ட காட்சியைக் கண்ணாடியிலே பார்த்து விட்டான் நாகராஜன்.

வெளியே சொன்னால் வெட்கம்! சொல்லாமல் இருந்தால் வேதனை! வீட்டை விட்டே வெளியேறி விட்டான்.

5. இது என்ன உலகம்

காடு, மலை எல்லாம் சுற்றினான்; வருடங்கள் ஒன்று, இரண்டு என்று மூன்றுக்கு மேல் ஓடின. நாகராஜன் நடைப் பிணமாக அலைந்து கொண்டிருந்தான். வாடிய முகத்திலே தாடி வளர்ந்து, பிச்சைக்காரனிலும் கேடு கெட்டவனாகக் காட்சியளித்தான் லட்சாதிபதி நாகராஜன்.

காதல் என்பது கற்பனை! காதலின் பெயரால், நாட்டிலே தினமும் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்!

இந்த உடலைத் தீண்டும் உரிமை உங்களுக்குத்தான் என்று கூறிய நாயகி, அடுத்தவன் அணைப்பிலே இருக்கிறாளே, இதுவா காதல்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிணங்கள்.pdf/93&oldid=1743032" இலிருந்து மீள்விக்கப்பட்டது