உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பித்தளை அல்ல பொன்னேதான்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


1
பித்தளை அல்ல, பொன்னேதான்!
"


"முத்து! முத்துசாமி! முத்து!"

"அப்பா! ஏம்பா அழறீங்க, அப்பா"

"முத்து! நான் பாவிடா! நான் பாதகன்டா!!"

"அப்பா! அழாதீங்கப்பா. நான் இனி இப்படிப்பட்ட தப்பு வழி போகமாட்டேம்பா... சத்யமாச் சொல்றேம்பா"

“என்னைக் கொல்லாதடா, முத்து! என்னைக் கொல்லாதே..."

"என்ன கஷ்டம் வந்தாலும், அப்பா! திருடக்கூடாதப்பா.. திருட்டுத் தொழில், ஈனத் தொழில் அப்பா. அப்பா! கூலி வேலை செய்யலாம்... நாலு இடம் பிச்சைகூட எடுக்க லாம்... திருட மட்டும் கூடாதப்பா...அப்பா!"

"ஐயையோ! முத்து! நான் என்னடா சொல்லுவேன்... எப்படிடா இதைத் தாங்கிக் கொள்வேன்.. முத்து! உன்னை இந்த நிலைக்கு..."

"அப்பா! நான் திருந்திவிடுவேம்பா!.. கவலைப்படாதீங்க... தங்கச்சிக்குச் சொல்லுங்க...!"

இவ்வளவு பேசுவதற்கு, போலீஸ்காரர் அனுமதி கொடுத்ததே ஆச்சரியம்—அவர்களுக்கும் குடும்பம்,பிள்ளை,பாசம், இருக்கிறதல்லவா. அதனாலே, ஆறுமாதம் ஜெயில் தண்டனை பெற்று 'வண்டியிலே' ஏறப்போகும் மகனிடம், தகப்பன், சிறிது நேரம் கதற அனுமதி கொடுத்திருந்தனர்.