பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை - சைவத் கிருமுறைகள் பன்னிரண்டும் சைவப் பெருமக் களுக்கு வேதத்தைப் போன்ற சிறப்புடையன. அவற்றுள்ளும் சைவ சமயாசாரியார் நால்வரும் அருளிய எட்டுத் திருமுறைகள் அடிக்கடி பயிலப் பெறுவன. அவற்றுள்ளும் மூவர் தேவாரம் பலவகைப் பண்ளுேடு அமைந்தமையால் திருக்கோயில்களில் விரிவாக ஒதப் பெறுகின்றன. ஆகையால் சைவத் கிருமுறைகள் என்று சொல்லும் வழக்கு அதிகமாகக் காகில் விழுவதில்லை : தேவார திருவாசகமென்றே மிகுதியாகப் பேசுகிருர்கள்.

தேவாரத். கிருப்பதிகங்களிற் பெரும்பாலானவை சிவத் தலங்களைப் பற்றியவை. அவ்வத்தலத்தில் அதற்குரிய தேவாரத் திற்குத் தலைமை இருப்பது இயல்பு. இதல்ை எல்லாத் தலங்களின் தேவாரங்களும் அடிக்கடி ஒதப் பெறுகின்றன.

திருஞான சம்பந்தப் பெருமான் முருகப் பிரானுடைய திருவவதாரம் என்ற ஒரு கொள்கை நெடுங் காலமாக இருக்து வருகிறது. சேக்கிழார் தம்முடைய பெரிய புராணத்தில் அப்படிக் கூறவில்லை. சிவபெருமானுடைய பிள்ளையார் என்று குறிப்பிப்ப துண்டு.

உமா தேவியாரின் ஞானப்பாலுண்டது பற்றி வந்த வழக் கென்றும், அதனுல் ஆளுடைய பிள்ளேயாரென்ற கிருநாமம் அப்பெருமானுக்கு வந்ததென்றும் அதற்குக் காரணம் கூறுவர். ஆனல் சேக்கிழார் காலத்தில் வாழ்ந்த பெரும் புலவராகிய ஒட்டக் கூத்தர் கிருஞான சம்பந்தர் முருகனுடைய திருவவதாாமென்றே சொல்கிரும். - - . -

வருகதை தெய்வமகள்என் மருமகள் வள்ளிவதுவை மனமகிழ் பிள்ளேமுருகன் மதுரையில் வெல்லும்இனிய தொருகதை சொல்லு,தவள ஒளிவிரி செவ்விமுளரி ஒளிதிகழ் அல்லிகமழும் ஒருமனே வல்லிஎனவே என்று தக்கயாகப் பரணியில் அவர் பாடுகிரு.ர். -

அவரைப் போலவே பிற்காலத்தில் முருகனைப் பாடிய புலவர்களிற் பலர் இந்தக் கருத்தை உடையவர்கள். அருணகிரி காதர் திருப்புகழில் பல இடங்களில் ஞானசம்பக்தர் முருகன து அவதாரம் என்பதைத் தெளிவாகச் சொல்கிரு.ர். х

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/5&oldid=596863" இலிருந்து மீள்விக்கப்பட்டது