பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பின்னு செஞ்சடை

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லால்' என்று திருவள்ளுவர் சொல்லுகிறர். எல்லா உயிர் களிடத்தும் தயைகாட்டும் தர்மத்தை அவர்கள் மறந்தார்கள். போலிவேடதாரிகளாக, அன்பின் றிக் கருமம் செய்தார்கள்; அருளின்றி வேள்வி வேட்டார்கள்; குழைவின்றி மறையை ஒதினர்கள். அன்பும் அருளும் குழைவும் உள்ள இடத்தில் இறை வன் உறைவான். அவர்களுடைய வாழ்விலே வளர்ச்சியும் இன்பமும் உண்டாகச் செய்வான். ஆல்ை அவை இல்லாத காருகாவனத்து முனிவர் களுக்கு அருளுருவாகிய இறைவன் பகைவகைத் தோற்றின்ை. அன்புருவாகிய பரமசிவன் விரோதி யாக விளங்கினன். பகைஞனே ஒழித்து விடவேண் டும் என்று அவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டார் கள். தீமையை மாற்றப் பலக்கேடும் சில முறைகள் உண்டு. முட்செடியை வெட்டக் கோடரி இருக் கிறது. அதைக் கொண்டு, வாழும் மரத்தை வெட் டியது போல, தீமையை மாய்க்க வைத்த முறைக வால் நன்மையுருவாகிய ஆண்டவனே அழிக்க எண்ணினர்கள். அதற்கென அமைந்த வேள்வியை இயற்றினர்கள். அதிலிருந்து தோற்றிய அனைத்தை யும் சிவபெருமான்மேல் ஏவி விட்டார்கள். பெருங்" கடலில் தீப்பந்தத்தை இட்டால் கடலா சூடு ஏறும்? அவர்கள் விட்ட எல்லாவற்றையும் இறைவன் கைப் பற்றிக் கொண்டான். அதுமட்டும் அன்று; அவர் கள் செய்த செயலேயும் தன் ஆற்றலேயும் கருணே. யையும் காட்டும் அடையாளமாக அவற்றைத் தன் னிடத்திலே வைத்துக் கொண்டான். அப்படி வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/52&oldid=596987" இலிருந்து மீள்விக்கப்பட்டது