பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருமுன் காத்தல்

"ஐயோ பாவம் ! இத்தனை இளவயசிலே இறந்து விட்டானே காளே போல வளர்ந்தான். என்ன என்னவோ செய்யப் போகிருன் என்று அவன் தாய் தந்தையர்கள் நம்பியிருந்தார்கள். எல்லாம் பாழாயின' என்று ஒரு வீட்டில் இருந்த கட்டிளங்காளே இறந்து பட்டதைக் குறித்து ஒருவர் வருந்துகிருரர். ஆனல் அடுத்த வீட்டிலே நெடு நாட்களாக வாழும் மனிதர் ஒருவர் இருக்கிருர், "கிட்டத்தட்ட நூறு இருக்கும் இந்தக் கிழத்துக்கு” என்று சொல்கிருரர்கள்; அது சோற்றுக்குக் கேடாய் இன்னும் வாழ்கிறது” என்று ஏசுகிருரர்கள்.

உலகின் போக்கே விசித்திரம். இளைஞன் இறந்தபோது அவன் நெடுங்காலம் வாழவில்லையே என்று அங்கலாய்க்கிறது. நெடுங்காலம் வாழ்க்க வனப்பார்த்து, "இவன் இன்னும் போகவில்லையே' என்கிறது. இவன் என்று கூடச் சொல்வதில்லை; இது என்று சொல்கிறது. உயர்திணே மனிதன் முதுமை வந்தால் உலக த் தி ன் கண்களுக்கு அஃறிணேயாகி விடுகிருன்

காரணம் என்ன ? முதுமை வரவர மனிதனு டைய ஆற்றலைக் குறுக்கி விடுகிறது. கரையும் திரை யும் மூப்பும் சாக்காட்டுக்கு முன் தோன்றும் அடை யாளங்கள். முதுமை ஏற ஏற மனிதனுக்குப் பொறி களின் ஆற்றல் குறைகிறது. பிறருடைய உதவியை மிகுதியாக எதிர்பார்க்கநேர்கிறது. ஒருவன் பிறருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/82&oldid=597047" இலிருந்து மீள்விக்கப்பட்டது