பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 - பிரசவ கால ஆலோசனைகள் குழந்தையின் பிதிருத்வம் (paternity) அதன் தாய்தந்தையின் ஜீவ அணுக்களுக்கு (genes) உட்பட்டது. குழந்தையின் ரத்தப் பரிசோதனை மூலம் அதன் தாய் தந்தையை இனம் காண முடியும். மனித உடலில் ஒடும் ரத்தத்தை "0" ரக ரத்தமென்றும் “A” ரக ரத்தமென்றும் 8 ரக ரத்தமென்றும் AB ரக ரத்தமென்றும் நான்கு வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள். தாயோ தந்தையோ இருவரில் ஒருவர் ‘0’ ரகரத்த மும் இன்னொருவரும் 0 ரக ரத்தமும் கொண்ட பெற் றோராயிருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை களும் ரக ரத்தமுள்ளனவாகத்தான் பிறக்கும். பெற்றோரில் ஒருவர் '0' ரகமாகவும் இன்னொருவர் 'A' ரகமாகவும் இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ‘0’ ஆகவோ, A ஆகவோ இருக்கும். இதர முறையிலும் இப்படிப்பட்ட பாகுபாடுகள் உண்டாகின்றன. - - - குழந்தையின் பாரம்பர்யத் தன்மைகள் தாய் மூல மாகவோ தகப்பன் மூலமாகவோதான் உண்டாகின்றன. தாய் தந்தையின் உயிரணுக்களில் (cells) உள்ள அணுக் கோல்களில் (chromosomes) பாதி அதன் தந்தையிட மிருந்தும், மற்ற பாதி தாயிட்மிருந்தும் வந்தவை. இதே ரீதியில் பாரம்பர்யத் தன்மை வம்ச வழியாகத் தொடர் கின்றன. - - - – Tši-fi sôžuosiste- & Cigirtù - (Dr. Sigmaund Frauid) டாக்டர் விட்டில் (Dr. Lytill) ஆகியோரது கூற்றுகளைக் கொண்டு முன்னர் நான் காதல்’ இதழில் எழுதிய இவ் விவரங்களை மீண்டும் எடுத்துக்கூறியிருக்கிறேன். இத்தகைய குழந்தை ஒரு குடும்பத்துக்குச் சரித்திரம் தரவல்லதொரு தெய்வம். இத்தெய்வத்தை வரவேற்கத் துடிக்கும் தாயின்-பூரண கர்ப்பிணியின் மனக் குதுகலத் துக்கு ஒப்புவமை இருப்பதில்லை அதனால்தான் அவள் தன்னுடைய பிரசவ வேதனையை அறவே மறக்க