பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 101 எத்தனம் செய்கிறாள். இந்நிலையின் பழக்கத்துக்கு அவளைக் கொண்டவனும் உதவுகிறான். - மக்கட்பேறு கொண்ட மனையின் மங்களகரமான சுபீட்சமே ஒர் அலாதிதானே! - ஆதிநாளிலே பிரசவத்தை ஒரு பொருட்டாகவே யாரும் கருதவில்லையாம். ஆனால் பேறுகாலத்தையும் குழந்தை ஜனனத்தையும் மட்டும் பெரிதும் பெருமை யுடன் போற்றி வந்திருக்கிறார்கள். - - நாகரிகம் வளர வளர, விஞ்ஞானம் வளர வளர, பிரசவம் என்பது ஒரு கண்டமாக-ஒரு சோதனையாகவே ஆகிவிட்டது. ஏனென்றால், பிரச்வத்தில் ஏற்பட்டஏற்பட்டு வருகிற- பயங்கரங்கள்தாம் இதற்குக் காரணம். - - . முதற் பிரசவத்தைத் தாய் வீட்டில் வைத்துக் கொள்வது நம் நாட்டில் பழக்கம். பெரும்பாலும் வீடு களில் வைத்துக் கொள்வதைவிட, மருத்துவ வசதிகள் நிரம்பிய ஆஸ்பத்திரிகளில் பிரசவத்தை வைத்துக் கொள்ளுவதே தற்காப்பும் பாதுகாப்பும் ஆன விவேக மான செயலாகும். கர்ப்பம் த்ரித்த நாள் தொட்டு பிரசவம் ஆகும் நாள் வரை அவ்வப்போது அடிக்கடி மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது நன்மை யான செயலாகும். • . - • * கிராமப்புறங்களில் உழைப்பை மதிக்கும் பெண்கள் கர்ப்பமுற்றால் அவர்களுக்கு அநேகமாக பிரசவம் ஒரு பயமாகத் தோன்றுவதில்லை. 'அழுதழுது தீர்த்தாலும் நான்தானே பிள்ளை பெற்றாகணும்' என்ற ஒரு வினா வுடன் தன் கஷ்டத்தைச் சகித்துப் பொறுத்துக் கொண்டு ஜீவவிளக்கை ஏற்றி வைத்துவிடுவாள். பிரசவ வலியை கர்ப்பவதி அதிகம் உணர்ந்து மன வேதனைப்படாமல் இருக்கவே உற்றவர்களும் உறவுக் காரர்களும் பிரசவ மனையில் பிரசவ அறையில் கூடுவது வழக்கம். - r - ஒரு ரூபாய்க்குட்பட்ட கடைச் சரக்கு”டன் இப் பிரசவம் முடிந்துவிடும்! . . . . . . . . . . . . நரிக்குறவர் சமுதாயத்தில் பிரசவத்தில் மனைவியுடன் கணவனும் உடன் இருப்ப்ர்னாம். அப்போதுதான் பிரசவ வேதனையை அவள் பொறுத்துக் கொள்ள முடியும்,