பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிரசவ காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் இனிய அனுபவங்களைத் தருகிற குறிப்பிடத்தக்க பருவம் என்பது ஒரு புறம் இருக்க, தன் வயிற்றில் பத்து மாதம் சுமந்த மழலைச் செல்வத்தைப் பெற்றெடுப்பதற்குள் மறுபிறவி எடுக்கிறாள் அந்தப் பெண் என்பதும் உண்மை.

ஒரு பெண் கருவுற்றதை அறிந்து கொண்ட நாள்முதல், குழந்தையை ஈன்றெடுக்கும் வரை அவள் உடலில் ஏற்படும் மாறுதல்கள், அவள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைப் பழக்க வழக்கங்கள், சுகப் பிரசவம் நடைபெற என்ன வழி என்பன போன்ற பயனுள்ள விஷயங்களை மிக எளிமையாகவும் விவரிக்கிறது இந்நூல்.