பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 - . . . . பிரவச கால ஆலோசனைகள் தாயின் கர்ப்பத்திலிருந்து சிசு வெளிவந்துவிட்டால்இயல்பாக வெளிவந்து விட்டால் உடனடியாக தாயையும் சிசுவையும் சம்ரட்சித்து இருவருக்கும் வேண்டியவற்றைச் செய்ய லேடி டாக்ட்ர்களும் நிர்ஸ்களும் காத்துக் கிடப் பார்கள். அது அவர்கள் கடவை மட்டுமன்று; அது அவர் களின் கருணையும் ஆகும். சிசுவின் தலை முதலில் உதய மாவதே சுகப்பிரசவம். " . நல்ல வாக்கும் நல்ல நினைப்பும் நல்ல ஆறுதலும் நல்ல நம்பிக்கையும் தாம் ஒரு கர்ப்பிணிக்குத் தேவைப் படுகின்ற முதலுதவிச் சாதனங்களாகும். இச்சாதனங் களுக்கு முழுமுதற் பலமாகவும் தோன்றாத் துணையாக வும் இருப்பது தெய்வத்தின் கருணையேயாகும்! இடுப்புவலி உச்சம் அடைகிறது. - குழந்தை பிறக் கிறது. பிறந்ததும் மூச்சுப்பிடிக்க அழுகிறது. அந்த முதல் அழுகையில் அதன் ஜீவன் பிரதிபலிக் கிறது. - இந்த ஜீவன்தான் அலகிலா விளையாட்டுடையானின் அற்புத மகிமை! அந்த மகிமையை ஈடேற்ற வேண்டுமெனில், கர்ப் பிணிகள் தக்க கவனத்துடன் பத்து மாதங்கள் வரையிலும் தங்கள் உடல் நலத்தைப் பேணவேண்டும். போதிய பிரசவ ஞானம் பெற்று ஒழுகவேண்டும்! இதன் மூலம் பேறுகாலப் பிரச்சனைக்கு விடிவு கண்டுவிட முடியும்! ஆம்; ஆரோக்கியமான உடலும் திடகாத்திரமான உள்ளமும் அமைந்து விடும்போது, மெய்யாகவே பிரசவம் என்பது ஒரு சாதாரணமான சம்பவமாகவே அமைந்து விட முடியும், அதன் அமைப்பில், தாயின் கடமையும் தந்தையின் பேறும் நிலைபெற்றுப் பூர்த்தி பெற்றுவிடும். வளர்ந்து வரும் சமுதாயத்தில் ஒரு புத்தம் புதிய ஜீவன் அங்கம் பெற்த்தொடங்கிவிட்டது. குழந்தைக்கு நம் வாழ்த்தையும் குழந்தையின் தாய்க்கு நம் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்வோ மாக...! * - - - - םםם