பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. ஆனா? பெண்ணா? கர்ப்பகாலத்துக்கு உரிய நாட்கள் 280 என்று மருத்துவ விற்பன்னர்கள்ால் கண்டு சொல்லப்பட்டிருக் கிறது. இவ்விதிக்குச் சற்றே-அதாவது ஓரிரு நாள்கள் முன்னதாகவோ அல்லது பின்பாகவோ பிரசவம் ஏற்பட்டு விடவும் கூடும். ஏனென்றால், கர்ப்பம் தரித்த நாளைக் கச்சிதமாகக் கணக்கிடுவது அசாத்தியமல்லவா? - கர்ப்பகாலக் கணக்குப் பார்க்கும் விதம் இது. கடைசியாக மாதவிலக்கு நின்ற தேதி மாசி பத்து என்றால், அடுத்த மாசி பத்துக்கு ஓராண்டு ஆகிறது. மூன்று மாதம் கழித்தால், கார்த்திகை பத்து ஆகிறது. இத்துடன் பத்து நாள்களைக் கூட்டினால். கார்த்திகை 20 ஆகிறது. இதுவே பிரசவநாள் ஆகும். இன்னொரு விதமாகவும் கணக்கிடப்படுகின்றது. கடைசி மாதவிலக்கு ஜனவரி 1 ஆம் தேதி ஏற்பட்ட தாக வைத்துக் கொள்வோம். அத்தோடு 7 ஐச் சேர்த்தால் 8 ஆகிறது. பிரசவமாகும் மாதம் அக்டோபர். இம்மாதத் தின் 8 ஆம் நாள்தான் பிரசவமாகக்கூடிய உத்தேச நாளாகிறது. - - - இந்தக் கர்ப்பகாலக் கணக்கை அட்டவணையிட்டுக் கொடுத்திருக்கிறார் இளவேனில் நூல் புதுமணத் தம்பதிகளுக்கு மேலே சொல்லப்பட்டுள்ள விதத்தை வைத்து, இவ்வட்டவணையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். . •