பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 35 கருவுற்ற பெண் தனக்கு மட்டும் உண்ணவில்லை; தன் கருவில் வளர்ந்து வரும் சிசுவுக்கும் சேர்த்து உண்ண வேண்டியவளாகிறாள். இரு உயிர்'களுக்கும் உணவு ஊட்டத்தைச் சேகரம் செய்து கொள்ளும் தொண்டைகடமையை- அவள் பெறுகிறாள். அவளது கர்ப்பத்தில் வாசம் செய்யும் கருப்பிண்டம் -சிசு அந்தத் தாயின் ஒர் உணர்வாகவும் அவளுடைய ஜீவனின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது. தாயின் ரத்த ஒட்டம்தான் சிசுவுக்கு வேண்டிய சக்தியை அளிக்கின்றது. உணவு வகைகளைத் தாய் உட்கொள்ளும் புஷ்டியைப் பொறுத்துத்தான், குழந்தையின் புஷ்டியும் ஊட்டமும் ஆரோக்கியமும் அமையும். - விளை நிலத்திற்குக் கால்வாய் வழி நீர் பாய்ந்து நில மெங்கும் பரவுவதைப் போலத்தான் தாயின் ஊட்டம், உயிர்ச் சக்தி அவள் கர்ப்பச் சிசுவுக்கும் நஞ்சுக்கொடி Umbilical cord வழியாக ஊடுருவிப் பாய்ந்து பரவுகிறது. (Sushrut Samhita) - - 1. ചങ്ങഖ கர்ப்பிணியின் உணவு சத்து மிக்கதாக இருக்க வேண்டும். தாதுப்பொருட்கள் மிகுந்திருக்க வேண்டும். பிரசவத்துக்கு முன்னதாகவும் பிரசவ சமயத்திலும், பிரசவத்துக்குப் பிறகும் அந்தப் பெண்ணின் உடல் வளம் செம்மைப்பட்டிருப்பதாவது அவசியமாகும். தாயின் சம்ரட்சணைக்குத் தேவைப்பட்ட ரத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கருவில் வளரும் சிசுவானது தன் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் வேண்டிய ரத்தத்தை தாட் சண்யம் இல்லாமல் எடுத்துக் கொண்டுவிடும். வயிற்றுச் சிசுவுக்கும் பிரசவத் தொல்லைகளைத் தாங்குவதற்கும் பிரசவத்துக்குப் பிறகு குழந்தைக்குப் பால் கொடுப்