பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 43 தேகப்பயிற்சி செய்ய முடியாதவர்கள் சிறிது துர மாவது நடக்கப் பழக வேண்டும். இது மிகவும் அவசியம். காற்றும் சூரிய வெளிச்சமும் பட்டால்தான் சருமம் நல்ல முறையில் இருக்கும். சொறி, சிரங்கு வராது. உடம்பில் அழுக்குப் படியவிடலாகாது; நன்கு தேய்த்துக் குளிக்க வேண்டும்; எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கமும் உடல் வெப்பத்தை அப்புறப்படுத்தும். விஞ்ஞான முறைப்படி செய்யப்பட்ட- டாக்டர்களால் சிபாரிசு செய்யப்பட்ட சோப்புகளையே உபயோகம் செய்ய வேண்டும். - . . ; : 4 கர்ப்பவதிகள் இருட்டற்ைகளை நாடுவது தவறு. பிரசவத்துக்கு இருமாதங்கள் முன்பிருந்தே முலைக் காம்பு களைச் சுத்தப்படுத்தி வரவேண்டும். 4. பற்கள் : பற்களைச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். கர்ப்ப காலத்தே பற்களின் ஈறு வீங்குவதும் ரத்தம் வடிவதும் சகஜம். இவற்றைப் பல் டாக்டர்களிடம் காட்டி உடனடி நிவாரணம் பெறவேண்டும். - 5. புகைபிடித்தல் ; நம்நாட்டில் பெண்கள் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கொள்வதில்லை. விதிவிலக்காக இருப்பவர்கள், கர்ப்ப காலத்திலாவது புகைபிடிப்பதை அறவே நிறுத்த வேண்டும். நரம்புக்கும் ஜீரண அமைப்புக்கும் புகையிலை கொடுமை உண்டாக்கும். லாகிரி வஸ்துகளையும் மது வகைகளையும் நாடவே கூடாது. - -