பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பிரசவ கால ஆலோசனைகள் முடியும். கர்ப்பஸ்திரீகளுக்குப் பிராணவாயு அவசியம். உள்ளுறுப்புகளின் இயக்கத்துக்கு பிராணவாயு சுவாசித் தல் நலம் தரும். நல்ல காற்று நுரையீரல்களைச் சுத்தப் படுத்தி வலுவூட்டும். உடற்பயிற்சிகள் பற்றிய வரை படங்கள் இப்போது எல்லா ஆஸ்பத்திரிகளிலும் இருக் கின்றன. (அ) உடம்பை நாற்புறமும் வளைத்தல் வேண்டும். இடுப்பின்மீது கைகளை வைத்துக்கொண்டு முன்னுக்கு வளைந்து, பின்னுக்கு நிமிர்ந்து, வலப் பக்கமாகவும் இடப் பக்கமாகவும் சாய்ந்து நிமிரவேண்டும். இம்மாதிரி பன்னிரண்டு முறை பயில்லாம். (ஆ) ஒற்றைக்காலில் நின்று கொண்டு, மற்றொரு முழங்காலை மடித்தவாறு மேலே துர்க்கி, மார்பைத் தொட வேண்டும். இப்படியே மாறிமாறி ஒவ்வொரு முழங்காலாலும் நெஞ்சைத் தொட வேண்டும். இயன்ற வரை உடம்பைக் கஷ்டப்படுத்திக் கொள்ளாத வகையில், இசய்ய வேண்டும். *. - (இ) வயிற்றை நன்கு உள்ளுக்குள்ளாக எக்கி, அதாவது, வயிற்றின் தசைநார்களை உள்ளுக்குள் இழுத்து, சற்றுநேரம் கழித்துத் தளரவிட்டு இம்மாதிரியும் பயிலலாம். - (ஈ) கால்களைச் சற்று அகல வைத்துக் கொண்டு நின்று, இரண்டு கைகளையும் சேர்த்துத் தலைக்கு மேலாகத் தூக்கி, கைகளிரண்டையும் கால்களுக்கிடையில் துழைந்து போகும்படி, கீழே குனிந்து நிமிரவேண்டும். இத்தகைய தேகப் பயிற்சிகளைக் கருவுற்ற தொடக்க காலங்களில் செய்தால் நன்மை பயக்கும். டென்னில் ஆடுதல், குதிரைச் சவாரி செய்தல், நீந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். *