பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 41 உட்கார்ந்து, ரேடியோவைத் திருப்பிப் பாட்டுக் கேட்பார்கள்; குழந்தைப்பாட்டு எதையாவது கேட்பார்களா வென்றால், அதுதான் நடக்காது. ஜாஸ் சங்கீதம் கேட் பார்கள். ட்விஸ்ட் நடன ஒலிகளை ரசிப்பார்கள். இந்த இடத்தில் கிடக்கும் குண்டுசியை அந்த இடத்தில் நகர்த்திப் போட மாட்டார்கள். இப்படிப்பட்டவர். களுக்குத்தான் பிரசவம் ஒரு தொல்லையாகவும் ஒரு சோதனையாகவும் ஒரு விதியாகவும் கூட அமைகிறது. உடலுழைப்பு காரணமாக, உடலின் உறுப்புகள் வலுப்பெற்று, தசை நார்கள் பக்குவம் அடைந்து. நரம்புகள் ஊட்டம் எய்தி, ரத்த ஒட்டம் சரளமாக. நடந்து இதன் நல்ல விளைவாக, பிரசவ காலத்தில் சுகப் பிரசவம் ஏற்படும் என்கிற உண்மையை அவர்கள் உணர்வதில்லை. ஆனால் கிராமங்களில் உள்ளவர்களின் உழைப்புக் காரணமாக சுகப்பிரசவம்தான் பெரும்பாலும் நடைபெறும். மருத்துவச்சி வந்து திரும்பிவிட்டாள் என்றால், பச்சை மண் குவா... குவா...' என்று முதற். குரல் கொடுக்கத் தொடங்கிவிடும். ஐம்பது, அறுபது ரூபாய்க்குள் கடைச்சரக்குகள் வாங்கி அரைத்து மருந்து சாப்பிட்டால் அவர்களுடைய பேறுகாலப் பிரச்சினை தீர்ந்து போய்விடும். - - கர்ப்பவதிகளுக்குப் பயிற்சி முக்கியம்; உழைப்பின் பயிற்சி இன்றியமையாதது. காலையிலும் மாலையிலும் சிறிதளவாவது காற்றாட நடக்க வேண்டும்; பங்களா மொழியில் சொல்லவேண்டுமானால், உலாவ வேண்டும்: பணக்காரர்கள் கார்களிலே உலாவ'ச் செல்வதுண்டே, அப்படியில்லை. நடந்து செல்லவேண்டும். இம்மாதிரி உலாவுதல் (walking) உறுப்புகளுக்கு நல்லது. . . . இவை தவிர, உடற்பயிற்சியும் நன்மை கொடுக்கும். அதன் காரணமாக, சிசுவின் உடல் வளமும் செம்மைப்பட