பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பிரசவ கால ஆலோசனைகள் விடுவார்கள். இதனால் அவர்கட்கு ஒருவகையான நிம்மதியும், புழுக்கமற்ற நிலையும் ஏற்பட ஏதுவுண்டு. ஆடைகள் வயிற்றையும் இடுப்பையும் கட்டுப்படுத்தி அழுத்தாத வகையில் சுருங்கி விரியும் தன்மை கொண்ட வையாக இருக்கவேண்டும் என்றார் வான் ப்ளார்காம் (Van Blarcom). கோடைக்காலத்தில் சேலை முதலியவை மெல்லிய தாகவும், குளிர்காலத்தில் குளிரைத் தாங்கும்படியாகவும் இருக்கவேண்டும் என்பது யாவரும் அறிந்த செய்தியே அன்றோ! வீட்டிலிருக்கையில் உள்பாவாடை, உள்பாடி களை உபயோகிக்காமல் இருப்பது நலம். 3. பயிற்சி கர்ப்பிணியின் ரத்த ஓட்டம் (blood circulation) நல்ல படியாக இருந்தால்தான் தாய் மூலம் அவள் சிசுவுக்கு நல்லது. ரத்த ஓட்டத்தின் அளவை ஒட்டித்தான் சிசுவின் ஆரோக்கியபலம் பலன் சொல்லமுடியும். உண்ட உணவு ஜீரணித்து ரத்தத்துடன் கலந்து புஷ்டி ஏற்றுவதற்குக் கர்ப்பிணிகள் ஒரளவு வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அதன் மூலம்தான் ரத்த ஒட்டம் சீராக அமைய முடியும். அயர்வையும் ஆற்றாமையையும் தரக்கூடிய வேலைகளைச் செய்யக்கூடாது. ஒர் அளவுடன் அலுவல்கள் செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் இவ் விஷயத்தில் ரொம்பவும் அக்கறையோடு இருப்பது வழக்கம். தண்ணிர்க்குடம் தூக்குவார்கள், மிளகாய் அரைப்பார்கள்; மாவு ஆட்டுவார்கள். சில்லறை அலுவல் களில் கவனம் செலுத்துவார்கள்; இயல்பாகவே அவர் களுக்குள்ள உடல் உரம் மேலும் வலுவடைகிறது. இத்தகையதொரு பழக்கத்தை நகரங்களில் க்ாண்பது அரிது. நாகரிகமும் பணமும் மிகுந்த இடங்களில் பெண்கள் கருவுற்று விட்டால், அவர்கள் நாற்காலியில்