பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பிரசவ கால ஆலோசனைகள் கடமையை, வயிற்றில் சுமந்து தவம் இருக்கும் கர்ப்பவதி, 'தாய்’ எனும் நன்மதிப்பைப் பெறுவதற்குள் அவள் முன்னே விரிந்து கிடக்கும் அந்தப் பத்து மாதங்களும் அவளுக்குப் பத்துக் கண்டங்களாக-பத்து யுகங்களாக-பத்துக் கனவுகளாகவே தோன்றும். கர்ப்பம் தரித்த அந்தப் பொன்னான மகிமைமிக்க கணத்திலிருந்து அவளுள் சுமை வளர வளர, அவளது சுமையின் கனவும்சுமை பற்றிய இன்பத் தொல்லையின் இனிய நற்கனவும் விரிந்து கொண்டே செல்கிறது. - இந்தப் பத்து மாதங்களிலே கர்ப்பிணிகளின் நிலை என்னவென்பதைக் கவனிக்க வேண்டும். 1. முதல் மாதம்: பெண்ணின் சினைமுட்டையோடு ஆணின் ஜீவ அணு கலந்து கர்ப்பம் தரித்துவிடும்போது, அக்கர்ப்பம் உருவ மற்ற தசைப்பிண்டமாகவே தொடக்கத்தில் அமைகிறது. இதன் அளவு ஒர் அங்குலத்தில் நூற்றிருப்பத்தைந்தில் ஒன்றுதான், என மருத்துவ அறிஞர்கள் சொல்லியிருக்கி றார்கள். கருவளரும் சத்தை ஊட்ட புதிய ரத்தக் குழாய் கள் உண்டாகின்றன. இத்தகைய கட்டத்தில், இத்தசைப் பிண்டத்தை வயிற்றில் சுமக்கத் தொடங்கும் கர்ப்பவதி இச்சுமையை எடுத்த எடுப்பில் அறிவது அசாத்தியமே. ஆனாலும், மாதவிலக்கு நின்று, உடல் ஆரோக்கியமும் அதற்கு அனுசரணையாய் அமைந்து, கர்ப்பம்'உண்டாகி' யிருப்பதற்கான அடையாளம் ஊர்ஜிதமான சமயத்தில், கர்ப்பவதிகள் தங்களையும் அறியாத விதத்தில் தங்களது வயிற்றில் கரு-உருவாவதை-உருவாகிக் கொண்டிருப் பதை-உருவாகியிருப்பதை எப்படியோ அறிந்து கொண்டு விட முடியும். இவ்வற்புதத்தை உணர்வதற்கு அவர்களு டைய ஆன்மாதான் உதவுகிறது. இவ்வுணர்வு அவர்