பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பிரசவ கால ஆலோசனைகள் பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருக்கின்றன. சிசுவுடன் இவையும் வளரும். நஞ்சு குழந்தையின் எடையில் ஆறில் ஒரு பங்கு இருக்கும். நஞ்சுககொடி 20 அங்குலம் முதல் 22 அங்குலம் வரை இருக்கும். சிலருக்கு 40.அங்குலமும் இருக்கக்கூடும். தஞ்சு என்பது மறு குழந்தை' என்று மருத்துவச்சிகள் சொல்வது உண்டு. தாயின் ரத்தத்தை சுத்தப்படுத்தி, குழந்தைக்குப் பாதுகாப்பாகவும் விவுச்சத்து முதலியவற் றினால் பாதிக்கப்படாமலும் இருக்க உதவும் இந்த நஞ்சும், குழந்தைக்குப் போஷாக்கு தரும் நஞ்சுக்கொடி யும் குழந்தை பிரசவமானதும்தான் அப்புறப்படுத்தப் படும். பிரசவம் ஆனதும் இந்த நஞ்சு முழுவதும் அப்புறப் படுத்தப்படுவதில் அக்கறை செலுத்தப்படும். பிரசவத் துக்குப் பின்னே அந்த நஞ்சு தங்கினால் உண்மையிலேயே அது நஞ்சு ஆகிவிடும். - கர்ப்பத்திலிருக்கும் சிசுவுக்கும் கருப்பைக்கும் இடையே இருக்கும் பணிக்குட நீர் (amniotic fluid) வெளி யிலிருந்து எவ்விதப் பாதிப்பும் குழந்தையை நெருங்காமல் காக்கும். கருப்பைக்குள் இந்நீர் முழுவதும் பரவியிருக்கும் பனிக்குடம் உடைந்துதான் சிசு உதயமாய்ப் பிரசவம் கருவுற்ற முதல் மாதத்தை அற்புதமாதம் என்று புகழ்கிறார்கள். - - - - ஏன் தெரியுமா? இப்போதுதானே, குழந்தை என்று சொல்லக்கூடிய அற்புதம் தாயின் உள்ளுணர்வு மட்டும் உணரத்தக்க வகையில், உருத்தெரியாத அளவில் உருவாகத் தலைப் பட்டு, அதன் மூலம் தாய்க்கும், தந்தைக்கும், குடும்பத்