பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 53 துக்கும், ஏன்-நாட்டுக்குகூட அது ஒரு வரப்பிரசாத மாகக் கருதப்படுகிறது! - . கர்ப்பிணி எனும் ஸ்தானம் பெறும் பெண் அளவான -புஷ்டிமிக்க-உயிரூட்டிகள் நிறைந்த ஆகாரம் சாப்பிட வேண்டும். இதுவே தலையாய கடமையாகும். . அவளது அடுத்த பாதுகாப்பு அவளது மனம்தான். தாயின் மனநிலையைப் பொறுத்துத்தான் கருவில் வளரத் தொடங்கும் சிசுவின் உள்ளப்பாங்கு அமையத் தொடங்கு கிறது. ஆகவே, தாய் எந்தவிதப் பயமும் கொள்ளாமல் நெஞ்சுரத்துடனும் மன மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும். தாய் கோழையானால், சிசுவுக்கும் அத்தகைய குணச்சேர்க்கை உருவாகிவிடும். பிரசவத்தை ஒரு தவமா கவும் ஒரு கடமையாகவும் கொள்ள வேண்டும். பிரச வத்தை ஒரு பயங்கரக் கண்டமாகக் கருதி, அதற்கென்றே கருவுறுவதைத் தவிர்க்கும் அபூர்வமான-அதிசயமானபெண் ஜடங்களைப் பற்றிய சிந்தனையை இவர்கள் கொள்ளலாகாது. தாயாக விரும்பாத எந்த ஒரு பெண் னும் உலகின் எந்த ஒரு முடுக்கிலும் கூட இருந்ததில்லை; இருக்கம் போவதும் இல்லை. 'ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே' என்று தாயின் வாய்மொழியாகச் சொல்லவில்லையாபுறம்? .." . மசக்கை முதல் வாரத்திலேயே தோன்றி விடுவதும் உண்டு. - . - - கர்ப்பவதிகளுக்குரிய முக்கிய அடையாளங்கள் ருது வாதல் நின்று விடுவதும் மசக்கை உண்டாவதும் ஆகும். கர்ப்பம் உருவாகியிருப்பதாக உணர்ந்தவுடன், அப் பெண் தகுந்த லேடி டாக்டரை அணுகிச் சோதித்துக் கொள்ளுவதே சிறந்தது. அவ்வப்போது ரத்தப் பரிசோத னையும் உடல் உஷ்ணநிலைப் பரிசோதனையும் (empa