பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - பிரசவ கால ஆலோசனைகள் ஒன்பதாவது மாதத்தின் இறுதியிலே, குழந்தை தாயின் கருச்சிறையினின்றும் விடுதலையடைய துரித மாகப்புரட்சி செய்யும். அப்போதெல்லாம் தாய்க்கு வயிற் றைச்சுற்றிலும் நோவு பரவிவரும். நாள் ஆக ஆக, வயிறு இறங்கி வந்துவிடும். பிரசவம் ஆகும் தருணம் வந்து விட்டது என்பதற்கு இது ஒர் அடையாளமாகும். - 'இடுப்பு வலி விட்டு விட்டு எழும், குழந்தை வெளி வருவதற்கு ஏற்ப அமைப்புப் பெறுகிறது. அதற்கு இந்த வலியின் உந்துதல் உதவுகிறது. கால் அங்குலக் குறுக்களவு கொண்ட யோனிப்பாதையை குழந்தை வெளிவரக் கூடிய அளவுக்கு விரியச் செய்கிறது இவ்வலி. இதற்கு 12, 14 மணி நேரம் பிடிக்கும். கர்ப்பாசயம் சுருங்கி விரிவதை தாய் நன்கு உணருவாள். வலி நின்று நின்று தொடங்கும். அதற்குப் பயந்து கொண்டு ஆகாரங்களை விலக்குதல் கெடுதல். பிரசவ வேதனையைத் தாங்கிக் கொள்ள உடல் வலுவு வேண்டும். ஆகவே ஊட்டம் மிகுந்த உணவுகளை மிதமாகக் கட்டாயம் சாப்பிட்டாக வேண்டும். நெய் சேர்த்த கஞ்சியைக் குடிக்கலாம். - அடுத்த கட்டம்: சிசு இப்பொழுது வெளியே வருகிறது.அதாவது கீழ் நோக்கித் தள்ளப்படுகிறது. இப்பொழுது நோய்-நோவு வலி-அளவிட முடியாத அளவுக்கு-தாங்கச் சமாளிக்க முடியாத அளவுக்கு மிக மிக அதிகமாக இருக்கும். வலுக் கொண்ட மட்டும் முக்கி வயிற்றுப் பாரத்தை வெளி யேற்ற முயல வேண்டும், அந்தப் பொறுமைக்கு-அந்தப் பிரசவ வேதனைக்கு-அந்தப் புனர்ஜன்மப் போராட்டத் துக்கு தெய்வமும் லேடி டாக்டரும் உயிர்த் துணையாக நிற்பார்கள்.