பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கர்ப்பகால நோய்களும் சிகிச்சைகளும்! மனம்:ஒத்த ஆணும் பெண்ணும் தம்பதியாகி, அவர் கள் இருவரும் நல்ல ஆரோக்கியமும் பெற்றவர்களாக இருந்துவிட்டால், அவர்களது தாம்பத்தியமும் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழுவதுடன், உரிய காலத்திலேயே அவர்களுக்குச் சந்தான பாக்கியமும் கிட்டிவிடும். இதற்கு அனுசரணையில்லாத வகையில் தம்பதியின் இணை அமைந்தால், அவர்களது மண வாழ்க்கை அவ்வளவு சுகமாக அமைய முடியாது. கணவன் அல்லது மனைவி ஆகிய இருவரில் யார் உடல் நலக் குறைவுடன் இருந்தாலும் அது அவர்களது மணவாழ்க்கையை எப்ப டியோ ஒருவகையில் பாதிக்கவே செய்யும். அதிலும் முக்கியமாக, பெண் நோயாளியாக இருந்து, அவள் கருத்தரித்தாலோ, அல்லது பெண் தேக ஆரோக்கியத் துடன் இருந்து புருஷன் சீக்காளியாக இருந்து, அவர்களது திருமண வாழ்வுக்குப் பின்னே அப்பெண் கருத்தரித் தாலோ, அக்கருப்பவதியைச் சாடும். கர்ப்பகால வியாதி கள், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் கர்ப்பிணி களுக்கு ஏற்படும் நோய்களை விடக் கூடுதலாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் சீருடன் இருந்து வந்தால்; கர்ப்பிணிகளுக்கு வரும் வியாதிகள் அவ்வளவு தீவிரமாக