பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 79 புதிய புவனத்தைத் தரிசிக்குமுன்னே அது அழத் தொடங்குகிறது. '. அக்குரல்தான் அதன் pவன்!

    • ...ΕΣ... Lριτ!

இந்தப் பாசக் குரல் திரிந்து குவா...குவா எனும் வீறிட்டலறும் அழுகையாக உருக்கொண்டு, அந்த ஒலி யுடன் இம்மண்ணை அடைகிறது அந்தப் பச்சை மண்.' அது அழுகிறது. அந்த அழுகை எப்படி வந்தது? அழுவதற்குரிய உயிர் எப்படி வந்தது அதற்கு! இவை எல்லாம்தான் சிருஷ்டியின் புதிர்விளையாடல்: பிரசவமான கொஞ்சப் பொழுதில் நஞ்சும் நஞ்சுக். கொடியும் அதைச் சேர்ந்த ஜவ்வும் வெளிப்படுவதற் குள்ளாக அவசரப்பட்டு குழந்தையைத் தாயிடமிருந்து வேறுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. இம்மாதிரி யான பிரசவக் கவனிப்புகளை லேடி டாக்டர்களும் நர்ஸ், களும் மேற்பார்வையிட்டுக் கொள்வார்கள். .. r தாய்’ எனும் புனித மிக்க தியாக சொரூபியாகத். தோன்றும் அப்பெண், தான் பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை-அது ஆணாக இருப்பினும் சரி-பெண். ணாக இருப்பினும் சரி-அதைப் பற்றிய கவலையின்றி, அடங்காத ஆர்வத்துடன் நோக்குகிறாள்! அப்போது அவள் நெஞ்சிலும் முகத்திலும் தோன்றும் அமைதிமிக்க. ஆனந்தத்திற்கு ஈடேது. இணை எது?