பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பிரசவ கால ஆலோசனைகள் முகம் குழந்தையின் தலை வெளிவருவதற்குத் தக்கபடியாக விரிந்து கொடுக்கின்றது. இதுவே இரண்டாவது அங்க மாகும். இவ்வேலையைச் செய்வது பனிநீர்தான். இரண்டாவது அங்கத்தில் இத்திரவத்தின் உதவி தேவையில்லை, ஆகவே முன்னைவிட சற்று அதிகமான வேதனை உண்டாகி, நீர் நிரம்பிய பை (The Bag of Waters) கிழிந்து அது வெளிப்பட்டுவிடுகிறது. இதைத் தான் பனிக்குடம் உடைவது என்று சொல்லப்படுகிறது. சிலருக்கு கருப்பப்பையின் வழி பெரிதாக்கப்படும் முன் பாகவே, பனிக்குடம் உடைந்து விடுவதுண்டு. இது உடைந்து, திரவம் வெளிப்படாதிருப்பதே நல்லது. பனிக்குடம் உடையும் நேரத்தையே குழந்தையின் ஜனன ஜாதக நேரமாகக் கணிக்க வேண்டுமாம். கர்ப். போதயம் ஜாதகம்' என்று சமஸ்கிருத வாக்கு. பனிக்குடம் உடைந்ததும், சுடு நீரில் நீராடுவதும், தொப்புளின் அடியில் விளக்கெண்ணெய் தடவி வைப் பதும், மெல்லிய வகையில் உடம்பைப் பிடித்து விடுவ தும் (Massage) சில பகுதிகளில் வழக்கமாம். - பிறப்புறுப்பு (Vagina) வெடித்து விடுவதைப்போன்ற தாங்கமுடியாத வலி மூச்சுமுட்டக் கிளம்பும். அதைத் த்ொடர்ந்து, பிறப்புறுப்பில் ஒரு வகைப்பட்ட துடிப்பும் உண்டாகும். இப்போது யோனி முகத்தில் (Birth canal). பிரசவத்தை இலகுவாக்கும் வகையில் வழ வழப்பு ஏற் படும் பொருட்டு, அப்பகுதியின் உட்செறிவில் விளக் கெண்ணெய் தடவுவதும் உண்டு. . . . . . . . . " யோனிக் குழி வழியாக குழந்தையின் சிரசு உதய மாகும் நேரத்தில் பலம் கொண்டமட்டும் முக்கினால், குழந்தையின் தலை முதலிலும் அதைத் தொடர்ந்து முழு, மையாகச் சிசுவும் வெளிப்பட்டுவிடும்.