பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பிரசவ கால ஆலோசனைகள் இராச் சாப்பாட்டை முடித்துக் கொள்ளுதல் நல்லது. அப்போதுதான், உண்டது செரிக்கும். மனக்கவலை கூடாது. வயிறு சரியில்லாவிடில், இராச் சாப்பாட்டைத் தவிர்ப்பது உகந்தது. - நன்கு ஜீரணமாவதற்கு பழவகைகளும் வெந்நீரும் உதவும். ஆகாரங்களின் அமைப்பிலேயே மலச் சிக்கல் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ளக்கூடும். மலச் சிக்கல், இந் நோய் சராசரியாக கர்ப்பவதிகளுக்கு பெரும் பாலும் ஏற்பட்டு விடுகிறது. ஆம்; இது ஒரு நோய்தான். கர்ப்பவதிகளைப் பொறுத்தளவில், நீர் மலம் கழிவது அவசியம். பொதுவாக கர்ப்பம் தரித்த காலத்திலிருந்து பிரவசமாகும் வரைக்கும் மலச்சிக்கல் ஏற்படவே கூடாது. எட்டு மாதம்வரை மலச்சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு அவர்கள் உண்ணும் ஆகாரங்களைக் கொண்டு வழி செய்து கொள்ளலாம். எட்டாவது மாதத்திலிருந்து மலக் கழிவுக்காக டாக்டரின் ஆலோசனைப் பிரகாரம் நடக் கலாம் பேதிக்குச் சாப்பிட்டுவிடக் கூடாது. கடுக்காய் கஷாயம், சூரத்தாமரை கஷாயம் வைத்துக் குடிக்கலாம். வெந்நீரும் பச்சைத் தண்ணிரும் நிறையக் குடிக்கலாம். அவசியமானால் argsfluorr (Enema) வைத்துக் கொள்ளலாம். நீரடைப்பு, மலச்சிக்கல் ஏற்பட்டால் இவ்விரு பைகளின் அழுத்தத்தினால் மையத்திலிருக்கும் கர்ப்பப்பை அதிகம் பாதிக்கப்பட்டு விடும். ". - கழிவுச் சேதனப் பொருள்கள் தேங்கினால், ரத்தம் கெட்டு அதன் விளைவாகக் குழந்தையின் வளர்ச்சி கெடுதிப்படும். சொறி சிரங்கு மண்டும். மயக்கம் ஏற்படும்.