பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 87 மலச்சிக்கல் தொடர்ந்தால், மனக்கிலேசம்,படபடப்பு மூர்ச்சை முதலிய சங்கடங்கள் எழுகின்றன. பிரசவம் நெருங்க நெருங்க இவ்விஷயத்தில் அதிகப்படியான கவனம் வேண்டும். கூடியவரை காப்பி, தேயிலைப் பானங்களை அருந்தக் கூடாது. புகையிலை கெடுதல். வெற்றிலை போடுவதை அளவுடன் கொள்ளலாம். . ~. மல பந்தம் காரணமாக, உடல் தோல் வெளுக்கும். இதற்குக் காரணம், தோலானது ரத்தத்திலுள்ள அசுத் தத்தை மயிர்க் கால்களின் வழியாகப் போக்க முயற்சி செய்து, அதிகக் கஷ்டம் எடுத்துக் கொள்வதால் வெளுத்துப் போகிறது. குண்டிக்காய்களுக்கு (kidneys) தோலைவிட அதிகச் சிரமம் ஏற்படுகிறது. இவை ஜீரணமாகும் ஆகாரத் திலுள்ள கழிவுப் பதார்த்தங்களைப் பிரித்து வெளி யேற்றும் வேலையை மேற்கொண்டிருக்கின்றன. கர்ப்பிணியின் குண்டிக்காய்களோ அவளுடைய வயிற்றி லுள்ள குழந்தையின் கழிவுப் பொருள்களையும் தன்னு டைய கழிவுப் பொருள்களுடன் சேர்த்து வெளியே தள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வோர் உடலுறுப்பும் மற்றது பலமிழக்கையில், அதற்குச் சகாயமாக இருந்து உதவு கிறது. மலபந்தத்தினால் ஆகாரத்திலுள்ள விஷ சம்பந்த மான பொருள்களை நீக்கிவிட குடல்கள் வலுவிழந்த போது குண்டிக்காய்கள் அதன் ஒத்தாசைக்கு வருவதால், அவற்றுக்கு இன்னும் வேலை கூடுதலாகிறது. ஆகா и வகைகளைக் கொண்டும் பச்சைத் தண்ணீரைக் கொண்டும், ஒரு பழக்கத்தின் பேரில் தினசரி இரு முறையாவது மலம் கழிய வேண்டும்.