பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பிரசவ கால ஆலோசனைகள் புளியேப்பம் ெ நஞ்செரிச்சல் அஜீரணத்தைத் தொடரும் உபவியாதிகளில் புளிப்பு ஏப்பம் வரும். சோடியம் பை கார்பனேட்டை (Sodinm Bicrbonate) sp(5 GA5335 gaisruq. 26ra GTG:#:; அதைச் சிறிதளவு தண்ணிரில் கலக்கிக் குடிக்கலாம். அதிகப்படியான சத்துள்ளதும் சீக்கிரம் செரிமானம் ஆக முடியாததும் ஆன ஆகாரங்கள்ை உட்கொள்ளுவதை நிறுத்தினால் புளியோப்பம் நின்றுவிடும். மிக எளிய மருந்தாக, கொஞ்சம் தண்ணிரில் ஒரு தேக்கரண்டி தேன் ஊற்றி, அதில் பாதி எலுமிச்சையைப் பிழிந்து கலக்கிக் குடித்து விடலாம். வயிற்றின் மேல் பகுதியில் எரிவது போன்றதோர் உணர்வு, வயிற்றிடை கூடுதலான ஆஸிட்கள் (acids) இருப்பதால் ஏற்படும். அஜீரணக் குறைபாடுகளில் இது வும் ஒன்று. இதைத் தகுந்த உணவு முறையால் நிவர்த்தி செய்யலாம். கடினமான பதார்த்தங்களையும் அதிகமான சத்துமிக்க பொருள்களையும் குறைக்க வேண்டும். நெஞ்செரிவும் புளியேப்பமும் ஒன்றோடொன்று பிணைந்தால், புளியேப்பத்திற்கான வைத்தியமே இதற். கும் போதும். - வயிற்றுப் பொருமல் வயிற்றில் வாய்வுக் கோளாறுகள் (gas troubles) கூடி வயிறு உப்புசமாயிருந்தால், வயிற்றுப் பொருமல் ஏற்படும். வளர்ந்த கர்ப்பப்பை குடலை அமுக்குவதால் இது ஏற்படும். வாய்வுப் பதார்த்தங்களைக் கூடிய வரையில் ஒதுக்கியாக வேண்டும். புளிப்பு ஏப்பத்திற்குச் சாப்பிடுவது போல சோடியம் பை கார்பனேட்' பானம் அருந்தினால் சரியாகிவிடும். . . .