பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தனிக்‌ கல்விப்‌ பயிற்சி

69

தையும், கௌரவமும் உண்டாகி, அவருடைய வாக்கை வேதவாக்காக எண்ணி, அந்தப் பிரகாரம் அனுஷ்டிக்கத் தொடங்கினேன்.




10-ஆம் அதிகாரம்
கடவுளின் நித்தியத்துவம், கல்வியின் பிரயோ
ஜனம், கடவுளை அறிதல்

அரசனுக்கும் கடவுளுக்கும் உள்ள பேதம்

உபாத்தியாயர் ஒரு நாள் எங்களுக்குப் பாடம் கொடுத்தபிறகு என்னைப் பார்த்து ““கடவுளுக்கு ஒரு நிமிஷம் எப்படி?” என்றார். உடனே நான் சொன்னதாவது: ““ஒரு பெரிய மணல் மலை இருக்கிறது; அந்த மலையிலிருந்து பதினாயிரம் வருஷத்திற்கு ஒரு மணல் வீதமாகக் கெட்டு, அந்த மலை முழுதும் நாசமாவதற்கு எத்தனை காலம் செல்லுமோ, அத்தனை காலங்கூட சுவாமிக்கு ஒரு நிமிஷம் ஆகமாட்டாது.” என்றேன். நான் சொன்னதை குரு அங்கீகரித்துக் கொண்டு, ஞானாம்பாளைப் பார்த்து, “நீயும் ஒரு திருஷ்டாந்தம் சொல்லு” என்றார். உடனே ஞானாம்பாள் ““லட்சம் வருஷத்துக்கு ஒவ்வொரு துளியாக வற்றி சமுத்திர ஜலம் முழுவதும் வற்றுவதற்கு எவ்வளவு காலம் செல்லுமோ, அவ்வளவு காலங்கூட சுவாமிக்கு ஒரு நிமிஷம் ஆகாது,” என்றாள். உடனே உபாத்தியாயர் எங்களைப் பார்த்து சுவாமிக்கு ஒரு நிமிஷம் அப்படி இருக்குமானால், அவ-