பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஞானாம்பாள்‌ சிறைப்படல்‌

89

தாயார் தகப்பனாருக்கு அடிக்கடி சொல்லி வந்தபடியால், என் தகப்பனார் மறுபடியும் பக்கத்திலே பெண் விசாரிக்காமல் ஆலசியமாயிருந்து விட்டார். ஞானாம்பாளைக் கன்னிகாதானஞ் செய்யும்படி சம்பந்தி முதலியாருக்குப் பல ஊர்களிலிருந்து கடிதங்கள் வந்தும் அவர் வீட்டுப் பெண்டுகளுடைய இடைவிடாத முயற்சியினால் அவர் அந்தக் கடிதங்களுக்கு யாதொரு மறுமொழியும் அனுப்பாமல் அசிரத்தையாய் இருந்துவிட்டதாகக் கேள்விப்பட்டோம்.




14-ஆம் அதிகாரம்
ஞானாம்பாள் சிறையில் அகப்பட்டுத் தப்புதல்
சிறை யெடுத்தவன் சீவனை இழந்தது


கோடை நாட்களில் குடும்ப சகிதமாய்க் கிராமாந்தரம் போய்ச் சில நாள் வசிப்பது எங்கள் வழக்கமாயிருந்தது. அந்த வழக்கப்படி அந்த வருஷம் நாங்கள் எங்கும் போகவில்லை. சம்பந்தி முதலியார் எங்கள் ஊருக்கு வடபுறத்தில் இரு காதவழி தூரத்திலிருக்கிற அவருக்குச் சொந்தமான பனம்பள்ளிக் கிராமத்துக்குக் குடும்ப சகிதமாய்ப் புறப்பட்டு அநேகம் வண்டிகள் குதிரைகள் பல்லக்குகளுடன் போனார். அங்கே சில நாளளவு தங்கியிருந்து ஒரு நாள் விடியற்காலத்தில் அந்தக் கிராமத்தை விட்டுப் புறப்பட்டு அவர்கள் எல்லோரும் சத்தியபுரியில் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்து சேர்ந்த சற்று நேரத்திற்குப் பின்பு, அவர்கள் வீட்டி-