பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

பிரதாப முதலியார் சரித்திரம்

பந்தி முதலியாருடைய பனம்பள்ளி கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அவ்விடத்திலே சம்பந்தி முதலியாரும் பின்னும் அநேகரும் ஏகமாய்க் கூட்டங்கூடி மூலைக்கு மூலை ஆள் அனுப்பியும் ஒரு செய்தியுந் தெரியாமல், அழுது பிரலாபித்துக் கொண்டிருந்தார்கள். ஞானாம்பாளைக் கண்ட மாத்திரத்தில் அவளைக் கட்டிக்கொண்டு சம்பந்தி முதலியாரும் அவர் பத்தினி முதலானவர்களும் பட்ட துயரமும் அழுத அழுகையும் இவ்வளவென்று சொல்லி முடியாது. அவள் உருமாற்றமாய் அப்போதிருந்த கோலத்தைப் பார்த்தவர்கள் யார்தான் மனம் இளகாமலிருப்பார்கள்? அவள் அன்றைய தின முழுதும் அன்ன பானாதிகள் இல்லாமல் பசிக்களையாயிருப்பதாகத் தெரிந்து, உடனே அவளையும் அவளுடன் கூடவந்த ஆண்டிச்சியம்மாளையும் ஸ்னானம் செய்யும்படி சொல்லி அவர்கள் போஜனஞ் செய்த பிற்பாடு அன்றைய தினம் நடந்த விருத்தாந்தங்களைச் சொல்லும்படி நாங்கள் கேட்க ஞானாம்பாள் சொல்லத் தொடங்கினாள்:

இன்றைய தினம் விடியற்காலம் நாலு மணிக்கு இந்தக் கிராமத்திலிருந்து, எல்லாரும் நம்முடைய ஊருக்குப் பிரயாணமாகும்போது நானும் எழுந்து வெளியே வந்து எந்தப் பல்லக்கில் ஏறிக்கொள்ளலாமென்று பார்த்து வருகையில் சில சிவிகையார் ஒரு பல்லக்கை எனக்குக் காட்டி ““இதில் ஏறிக் கொள்ளுங்கள் அம்மா”” என்றார்கள். நான் உடனே அந்தப் பல்லக்கில் ஏறிக்கொண்டு, அப்போது அதிக இருட்டாயிருந்ததனால் கதவை மூடிக்கொண்டு பல்லக்கிலே படுத்துக்கொண்டேன். பல்லக்குத் தூக்குகிறவர்கள் வழக்கப்படி சப்தமிட்டுக் கொண்டு, ஓடினார்கள். நான் உடனே கண்ணை மூடிக்கொண்டு நித்திரை போய்விட்டேன். பிற்பாடு சூரியோதய நேரத்தில் நான் விழித்துப் பல்லக்கின் கதவைத் திறந்து பார்த்தபோது, தெற்கு முகமாய்ப்