பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறையில் தப்பிய விவரம்

93

போக வேண்டிய பல்லக்கு வடக்குமுகமாய் ஓடிக்கொண்டிருப்பதாகத் தெரிந்தது. மற்றப் பல்லக்குகளும் வண்டி குதிரை முதலிய வாகனங்களும் கூட வருகின்றனவாவென்று அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் எட்டி எட்டிப் பார்த்தேன். என் பல்லக்கைத் தவிர வேறே ஒரு வாகனத்தையாவது சொந்த மனுஷர்களையாவது நான் பாராதபடியால் எனக்குச் சந்தேகமுண்டாகி சிவிகையாரைக் கூப்பிட்டு “பல்லக்கு வடக்கே போவதற்குக் காரணம் என்ன” வென்றும், “மற்ற வாகனங்களெல்லாம் எங்கே” யென்றும் கேட்டேன். அவர்கள் மாறுத்தரம் சொல்லாமல் பல்லக்கைத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். வழியில் யாராவது வந்தால் அவர்களை விசாரிக்கலாமென்று இரு பக்கமும் பார்த்துக் கொண்டு போனேன். வெகு தூரம் வரையில் ஒருவரும் வரவில்லை. இன்னது செய்கிறதென்று தெரியாமல் நான் திகைத்துப் போயிருக்கும்போது சிவிகையார் ரஸ்தாவுக்கு மேற்கே கொஞ்ச தூரத்தில் ஒரு கள்ளுக் கடையைக் கண்டு, கள்ளுக் குடிப்பதற்காகப் பல்லக்கை ரஸ்தாவில் நிறுத்திவிட்டுக் கள்ளுக் கடைக்குப் போய்விட்டார்கள். தப்புவதற்குச் சமயம் இது தானென்றும் இது தப்பினால் வேறு சமயம் வாய்க்காதென்றும் எண்ணி, உடனே நான் கீழ்ப்புறத்துக் கதவைத் திறந்துகொண்டு கீழே குதித்து அந்தக் கதவை மூடிவிட்டுப் பல்லக்கின் மறைவிலேபோய் ரஸ்தாவுக்குக் கீழ்ப்புறமிருக்கிற காட்டுக்குள் நுழைந்துவிட்டேன். அது அடர்ந்த காடானதால் அதற்குள்ளே இருக்கிறவர்களை ஒருவரும் கண்டுபிடிக்க முடியாது. என்னுடைய காலில் இருந்த பாதரஸம், தண்டை முதலியவைகள் சப்திக்காதபடி அவைகளைக் கழற்றி மடியில் வைத்துக் கொண்டு முள்ளிலும் கல்லிலும் விழுந்து ஓட ஆரம்பித்தேன். அந்தக் காட்டில் மனுஷருடைய கால் அடியே இல்லாதபடியால் நான் குறுக்கே விழுந்து எனக்குச் சக்தி உள்ளமட்டும் ஓடினேன். மரக் கொம்புகள் என் மயிரைப்