பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

பிரதாப முதலியார் சரித்திரம்

பிடித் திழுக்க, செடிகளெல்லாம் சேலையைக் கிழிக்க, முன்னேயிருக்கிற மரம் முட்டித் தள்ள, பின்னே யிருக்கிற மரம் பிடித்துத் தள்ள, பக்கத்து மரங்கள் பாய்ந்து தாக்க, இவ்வகையாக நான் வெகுதூரம் ஓடின பிற்பாடு கொஞ்ச தூரத்தில் ஒரு சிறிய மண்டபத்தைக் கண்டு, அதற்கு நேரே ஓடினேன். அந்த மண்டபத்தில் இந்த ஆண்டிச்சி அம்மாளைத் தவிர வேறொருவரும் இல்லை. இந்த அம்மாள் என்னைக் கண்ட உடனே ““நீ ஆர் அம்மா! உன்னைப் பார்த்தால் பரதேவதை போல் இருக்கிறதே! நான் பூசை செய்து வந்த தெய்வம் பெண் வடிவங்கொண்டு பிரத்தியக்ஷமாய் வந்ததுபோல் இருக்கிறதே!”” என்று என்னை ஸ்தோத்திரம் செய்தார்கள். நான் அந்த அம்மாளுக்கு நமஸ்காரஞ்செய்து “நான் தெய்வம் அல்ல. மனுஷி தான்” என்று நடந்த காரியங்களெல்லாம் தெரிவித்து என்னை ரக்ஷிக்கவேண்டுமென்று பிரார்த்தித்தேன். அவர்கள் மனம் இரங்கி “என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள். “எப்படியாவது என்னைப் பனம்பள்ளி கிராமத்துக்குக் கொண்டுபோய் விடவேண்டும்” என்று விண்ணப்பஞ் செய்தேன். அந்தத் துஷ்டர்கள் துரத்திக் கொண்டு வந்தால் என்னைக் கண்டுபிடிக்காதபடி, ஆபரணங்களையெல்லாம் கழற்றி ஒரு துணியில் முடிந்து கொண்டு, ஒரு காவி வஸ்திரத்தை எனக்குத் தரிப்பித்து என்னை உருமாற்றி, அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். நாங்கள் தெற்குமுகமாய்ப் போகிற ஓரடிப் பாதைவழியாய் வெகுநேரம் நடந்தபிற்பாடு ரஸ்தாவில் வந்துசேர்ந்தோம். அந்த ரஸ்தாவில் நடக்க எனக்கு மனமே இல்லை. ஆயினும் வேறே மார்க்கம் இல்லாதபடியாலும் எனக்குக் கால் நடக்கக் கூடாமல் வீக்கமா யிருந்தபடியால் வழியே ஒரு பாய் வண்டியை வாடகைக்கு அமர்த்தி, அதன்மேலே நாங்கள் இருவரும் ஏறிக்கொண்டு அதிக நடுக்கத்துடன் செல்லும்பொழுது அஸ்தமிக்கிற சமயத்தில் வடக்கே இருந்து இரண்டு குதிரைக்காரர்களும் இரண்டு காலாட்களும் ஓடி