பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறையெடுத்தவன் செய்தி

97

படி நாங்களே மற்றவர்களை யெழுப்பிவிட்டோம். உங்கள் வீட்டு அம்மாமார்கள் எல்லாரும் தனித்தனியே ஒவ்வொரு பல்லக்கின் மேலே ஏறிக்கொண்டார்கள். இந்த அம்மணி வீட்டுக்குள்ளிருந்து, வெளியே வந்தவுடனே எங்களுடைய பல்லக்கின் கதவைத் திறந்து அதில் ஏறிக்கொள்ளும்படி சொன்னோம். இந்த அம்மணி கபடம் இல்லாமல் எறிக்கதவைச் சாத்திக்கொண்டு தூங்கிவிட்டார்கள். அந்தப் பல்லக்கைச் சிவிகையார் தூக்கிக்கொண்டு ஓடும்போது நாங்கள் இருவரும் பின்தொடர்ந்து போனோம். நாங்கள் மற்றப் பல்லக்குகளுடன் எங்களுடைய பல்லக்கையும் கொண்டுபோவது போல் மாரீசம் பண்ணி பிறகு கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின்வாங்கினோம். மற்ற வாகனங்களும் ஆட்களும் கண்மறைகிறவரையில் மெல்ல மெல்லக் கொண்டுபோய் இருட்டில் ஒருவருக்குந் தெரியாமல் எங்களுடைய பல்லக்கைத் திருப்பி அதிவேகமாய்க் கொண்டு போனோம்.

நாங்கள் இருவரும் வெகு தூரம் பல்லக்குடன் சென்று, பிற்பாடு தாசில்தாருக்குச் சந்தோஷ சமாசாரம் சொல்லுவதற்காக நாங்கள் முந்திப் போய் பல்லக்கில் அம்மா வருகிற சமாசாரத்தை அவருக்குத் தெரிவித்தோம். அவர் ஒரு வீட்டிலே தனிமையாய் இருந்துகொண்டு, சந்திரோதயத்துக்காகக் காத்திருக்கும் சாதக பக்ஷிபோல் அகமகிழ்ச்சியுடன் வழியைப் பார்த்துக்கொண்டிருந்தார். மத்தியானம் பதினைந்து நாழிகைக்குப் பல்லக்கு வந்து சேர்ந்தது. உடனே சிவிகையார் தாசில்தாரிடத்தில் வந்து “எசமான்கள் விரும்பின மாதரசியைப் பல்லக்குடன் கொண்டுவந்து விட்டோம். நாங்கள் பட்ட பிரயாசைக்குத் தகுந்த சம்மானம் செய்யவேண்டும்” என்று சொன்னார்கள். உடனே தாசில்தார் எழுந்து ஓடி அதிக ஆவலுடன் பல்லக்கைத் திறந்து பார்க்க உள்ளே ஒருவருமில்லாமல் சுத்த சூனியமாயிருந்தது. அவரும்

7