பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiv

காணாதவரும், ஔவையார் நீதிநூலை செவ்வையாக அறியாதவரும், தமிழின் தரம்பற்றிப் பேசத் தகுதியற்றவர் என்று சாடுகிறார். வீட்டு மொழியே நாட்டு மொழியாக வேண்டும்; நாட்டு மொழிக்குப் பிறகே வேற்றுமொழி வேண்டும் என்று. ஆங்கிலேய ஆட்சியில் அரசாங்க அலுவலில் ஈடுபட்டிருந்த இம்மேதை அஞ்சாநெஞ்சுடன் வாதாடுகிறார். வேதநாயகர் உண்மையிலேயே உயர்த்த மனிதர்; உயிர்க் கவிஞர்; புதினத்தின் தந்தை; பெண் கல்வி பேசிய பெருமகன்; நீதி நூல் தந்த நீதிபதி.

வாழ்க வேதநாயகரிவ் இலக்கியம்! .

நன்றி: நீதிபதி வேதநாயகர்.