பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xiii

எல்லாத் துறையிலும் வல்லுநராய் விளங்கினும் ஒரு துறையில் இவர் தம் முன்னோரை வென்ற முதல்வராய் விளங்குகிறார். ஏனெனில், உரைநடையில் நெடுங்கதை என்ற புதுத் துறையைத் தமிழ் இலக்கியத்திலே புகுத்திய பெருமை இவரையே சாரும். பிரதாப முதலியார் என்ற நெடுங்கதையை எழுதி, தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலையான ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டார் வேதநாயகர். இவரைத் “தமிழ்ப் புதினத்தின் தந்தை” என அழைக்கலாம்; அழைக்கவேண்டும்.

வேதநாயகர் எழுதிய நூல்களின் உயிர்நாடி ஒழுக்கமாகும். இவர் ஓர் உத்தம.கத்தோலிக்கர், எனவே, இயேசு பெருமானைப்பற்றியும், அவரது அன்னையைப் பற்றியும் பாடல்கள் பல செய்துள்ளார். மெய்மறைபற்றிய இத்தகைய நேரடியான கவிதைகளைத் தவிர. கிறிஸ்துவ மறையின் நன்னெறி பொதிந்துள்ள கவிதைகளும் இவரிடமிருந்து பிறந்தன. . கிறிஸ்துவசமயத்தின் வருகையால் தமிழ் இலக்கியத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டதென்பது மறுக்கமுடியாத உண்மை. தமிழர் மட்டுமே அறிந்து நுகர்ந்து இலக்கிய ஏடுகளை வேற்று நாட்டவரும் விரும்பிக் கற்க அவற்றை முதன் முதலாக வேற்றுமொழியில் மொழி பெயர்த்துவர் வீரமாமுனிவர் என்ற சேசுசபைக் குரு. போப், கால்டுவெல் போன்ற பெரியார்கள் தமிழுக்குச் செய்த தொண்டு மறக்க முடியாத ஒன்று. இப்பெரியார்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றிய வேதநாயகர் தான் உத்தம கத்தோலிக்கர் என்பதையும். அதே சமயத்தில் தமிழ் பக்தர் என்பதையும் காட்டி விடுகிறார். உள்ளத்தை அள்ளும் தெள்ளு தமிழில் தமிழின் சிறப்பைக் கூறுகிறார்.

தமிழை நன்கறியாது, அதன் பெருமையை உணராது அதைக் குறைமொழியெனக் கூறும் குறுமதி படைத்தோரைச்சிறுமதியுடைய சிற்றினம் என்கிறார் வேதநாயகர். வள்ளுவரின் குறளை வாசியாதவரும், கம்பரின் கற்பனையைக் .