பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்டிச்சி அம்மாள்‌ கணவன்‌

113

இந்த வீட்டு அம்மாமார்களை நான் கண்ணாலே பார்க்கவேண்டியது முக்கியமாயிருக்கிறது; அவர்களை நான் பார்க்கலாமா?”” என்று கேட்டார். உடனே சம்பந்தி முதலியார் அவரை நோக்கி, “”உங்களைப் பார்த்தால் மகா உத்தம புருஷராகக் காணப்படுகின்றது. நீங்கள் எங்களுடைய பெண்டுகளைப் பார்க்கத் தடையில்லை”” என்று சொல்லி ஞானாம்பாளையும் ஆண்டிச்சி அம்மாளையும் அழைத்துக் கொண்டு வந்து அவர் முன்பாக விட்டார். அவர் ஞானாம்பாளை அதிகமாகக் கவனிக்கவில்லை. ஆண்டிச்சி அம்மாளை மட்டும் அதிக கவனமாக உற்றுப் பார்த்தார். அந்த அம்மாளும் அவரைச் சற்று நேரம் உற்றுப் பார்த்து “”ஆ! என் பிராண நாயகரே!”!” என்று அலறிக்கொண்டு அவருடைய பாதத்தில் விழுந்தாள். உடனே அவர் அவளை வாரித் தூக்கி “”இந்தப் பஞ்சைக் கோலத்தோடு உன்னைப் பார்க்கவா வந்தேன்!”” என்று கண்ணீர் மழை சொரிந்தார். அவருடைய துக்கம் சிறிது மாறின பிற்பாடு அவர் எங்களைப் பார்த்து, “”இவள் என்னுடைய பத்தினி; இவளை நான் திரைமறைவில் விசாரித்தபோது, என் பெண்சாதியினுடைய குரலாயிருந்தபடியால், அவளை நான் பார்க்கவேணுமென்று கேட்டுக் கொண்டேன்; இவள் என் பெண்சாதி என்பது நிச்சயந்தான்; எங்களுடைய சரித்திரத்தைக் கேள்விப் பட்டீர்களா?ர” என்றார். நாங்கள் “கேள்விப் பட்டோம்” என்றோம். அவர் எங்களைப் பார்த்துச் சொல்லுகிறார்:— ”“நான் இவளைப் பிரிந்தபிறகு பல தேசங்களுக்குப் போய் சத்துருக்களுடன் யுத்தம் செய்தேன். ஆரம்பத்திலே அபஜயம் ஏற்பட்டாலும் அந்தத்தில் விஜயலக்ஷ்மி எங்கள் பங்கில் இருந்தாள். நான் சில நாள் வரைக்கும் இவளுக்குக் கடிதங்கள் அனுப்பிக் கொண்டுவந்தேன்; மத்தியில் நான் குண்டுபட்டு நெடு நாள் வைத்தியசாலையில் இருந்தபடியால் கடிதம் எழுதத் தப்பிப்போய் விட்டேன். அப்போது நான்

8