பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

பிரதாப முதலியார் சரித்திரம்

அவன் எனக்கு எவ்வகையிலாவது தீங்கு செய்யவேண்டுமென்று நினைத்திருப்பதாகக் கேள்விப்படுகின்றேன். எனக்கு ஒரு புத்திரன் பிறந்து இறந்துபோனதாகவும் வேறே பிள்ளை இல்லையென்றும் நான் சந்ததி இல்லாமல் இறந்துபோனால் என் பாளையப்பட்டைக் கவர்ன்மெண்டார் கட்டிக் கொள்வார்களென்று பயந்து ஒரு பிள்ளை காணாமற் போயிருந்து அகப்பட்டது போல நான் மாறுபாடு பண்ணுவதாகவும் அந்தச் சிரெஸ்ததார் கலெக்டருக்குப் போதித்து என்னுடைய பாளையப்பட்டை ஜப்தியில் வைக்கப் பிரயாசைப் படுகிறானாம். இதற்கெல்லாம் நான் எவ்வளவும் பயப்படவில்லை. நியாயமும் சத்தியமும் நம்முடைய பக்ஷத்திலிருக்கும் போது நமக்கு யார் என்ன செய்யக் கூடும்? நான் சீக்கிரத்தில் கனகசபைக்கு முகூர்த்தம் பார்த்துத் தெரிவிக்கிறேன். நீங்கள் விஜயஞ் செய்து தம்பதிகளை ஆசீர்வதிக்க வேண்டும்” என்று சொல்லிக் கனகசபை தகப்பனாரும் மற்றவர்களும் விடை பெற்றுக் கொண்டு போய்விட்டார்கள்.




20-ஆம் அதிகாரம்
இல்லறம்—குண அழகு அழகேயன்றி
முக அழகு அழ கல்ல
கெட்ட ஸ்திரீகளும், நல்ல ஸ்திரீகளும்

விக்கிரமாதித்தன் காட்டில் ஆறு மாதமும் நாட்டில் ஆறு மாதமும் வசித்தது போல நானும் ஞானாம்பாளும், அவள் தகப்பனார் கிரஹத்தில் ஆறு மாதமும் என் கிரஹத்தில் ஆறு மாதமும், மாறி மாறி வசிக்கிற தென்று, என் தகப்பனாரும், ஞானாம்பாள் தகப்பனாரும் நிபந்தனை