பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xviii

அகவையில் (1848இல்) வேதநாயகர் அரசாங்க அலுவலில் அமர்ந்தார். அறிவும் இளமையும் கொண்ட அவர் சோம்பலின்றி ஊக்கத்துடன் தன் அலுவல்களைச் செய்து, தன் மேலதிகாரிகளின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் உரியவர் ஆனார். தன் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களை முறைப்படுத்தி அடுக்கிப் பாதுகாத்து வந்ததோடு, அவற்றைப் பகுத்துப் பார்த்து அரசாங்க தடைமுறைகளையும், நீதிமன்ற நெறிமுறைகளையும் அறிந்தார். ஈராண்டுகள் இங்ஙனம் கழித்தன.

திருச்சிராப்பள்ளியிலிருந்த மாவட்ட நீதிமன்றத்திற்கு (District Court) 1850ஆம் ஆண்டில் மொழி பெயர்ப்பாளர் ஒருவர் தேவைப்பட்டார். ஆங்கிலமும் அருந்தமிழும் அறிந்த பலர் அவ்வேலைக்காக விண்ணப்பித்தனர். அங்கு நீதிபதியாக இருந்த பாய்லோ என்பவர், விண்ணப்பித்தவர்களை அழைத்து நேர்முகத் தேர்வு ஒன்று நடத்தினார். ஆங்கிலத்தில் உள்ளதைத் தமிழிலும், தமிழிலுள்ளதை ஆங்கிலத்திலும் எழுதிக் காட்டுமாறு கட்டளையிட்டார். வேதநாயகரின் மொழி பெயர்ப்பு மற்றவர்களுடைய மொழி பெயர்ப்புகளை விடச் சிறந்திருந்ததாவ் வேதநாயகர் தேர்வு செய்யப்பட்டு மொழி பெயர்ப்பாளராக அமர்த்தப்பட்டார்.

அலுவலில் ஓர் அல்லல் :

ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்ற அக்காலத்தில் ஆங்கிலமே ஆட்சிமொழியாக அமைந்திருந்தது. ஆகவே அரசாங்க சட்டங்களும் ஆணைகளும் நீதிபதிகளின் தீர்ப்புகளும் ஆங்கிலத்திலேயே இருந்தன. ஆங்கிலம் அறியாத மக்களுக்காக இவற்றைத் தமிழிலே மொழி பெயர்க்க வேண்டியிருந்தது. நீதி வேண்டி நீதிமன்றத்திற்கு வரும் நம் மக்கள், தங்கள் முறையீடுகள் முதலியவற்றைத் தாமறிந்த தாய்மொழியாம். தமிழிலேயே எழுதித்தந்தனர். தமிழறியா ஆங்கிலேயர் நீதிபதிகளாய் இருந்ததால், அவர்களுக்காக அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டி-