பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xix

யிருந்தது. இந்த மொழி பெயர்ப்பு வேலையே வேதநாயகரின் முழுநேர வேலையாயிற்று.

கடமையுணர்வும் கடும் உழைப்பும் உடையவேதநாயகர் தன் வேலைகளைத் திறம்படச் செய்ததோடு, அந்தந்த நாள் வேலைகளை அந்தந்த நாளே முடித்து வந்தார். இதனாள் தன் மேலதிகாரிகளின் அன்புக்கும் பாராட்டுக்கும் அருகர் ஆனார். சில ஆண்டுகள் இப்பணி இடையூன்றி இனிதே சென்றது. ஆனாலும் வேலைப்பளு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வந்ததால், அன்றைய வேலைளை அன்றே முடிக்க இயலாத நிலை நேர்ந்தது. ஆயினும் அத்தடையை வெல்ல, வேதநாயகர் வேறு ஒரு முறையைக் கையாண்டார். தனக்கு உதவியாக எழுத்தர் ஒருவரைத் தன் சொந்த முறையில் அமர்த்திக் கொண்டு, தான் மொழிபெயர்த்துச் சொல்வதை அவரை எழுதச் செய்தார். இதனால் மொழிபெயர்ப்பு அலுவல் முட்டின்றிச் சென்றது.

அக்காலத்தில் மாவட்ட வழக்கு மன்றங்களில், வழக்குகளுக்குத் தீர்ப்பளிப்பதில் நீதிபதிக்கு உதவ, “காசியார்” என்ற சான்றாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தார்கள். வழக்கின் முடிவில், நீதிபதியின் கருத்தும். காசியாரின் கருத்தும் ஒருமித்து இருந்தால், அத்தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்படும். இன்றேல், மேலாணை நீதி மன்றமாகிய மாநில நீதி மன்றத்திற்கு வழக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு மறுபடியும் ஆராயப்படும்.

மேஸ்தர் டேவிட்சன் என்பவர் மாவட்ட நீதிபதியாயிருந்தபோது, இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடைவே சமைய அடிப்படையில் மூண்ட கலகவழக்கொனறு ஆராயப்பட்டு வந்தது. அதன் முடிவில், நீதிபதியும், காசியாரும் கருத்துவேறுபாடு கொண்டனர். அதனால் அவ்வழக்கு மாநில நீதி மன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டியதாயிற்று. அதன் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவேண்டிய வேலை வேதநாயகருடையதாயிற்று. அவரும் அவற்றைச் செவ்வனே முடித்து, நீதிபதி-