பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கெட்ட தந்தையும்‌ நல்ல மகனும்‌

165

தகப்பன் வியாதி யுடன் படுத்திருக்கும் போது அந்த மேல் மாடிக்குப் போகிற படிகளில் நெருப்புப் பிடித்துக் கொண்டு மேல் மாடியிலும் தாவ ஆரம்பித்தது. படிகளில் நெருப்புப் பற்றிக் கொண்ட படியால் வியாதியஸ்தனை ரக்ஷிக்கும் பொருட்டு மேல் மாடியில் ஏறுவதற்கு மார்க்க மில்லாமல் போய் விட்டது. இவ்வகையாகத் தகப்பனுக்கு நேரிட்ட ஆபத்தை, மாமன் வீட்டிலிருந்த மூத்த பிள்ளை கேள்வியுற்று உடனே ஓடிவந்து படி வழியாய் மேல்மாடிக்குப் போக யத்தனித்தான். அவனுடைய பிரயத்தனத்துக்கு அக்கினிச் சுவாலை இடங்கொடுக்க வில்லை. அந்த ஜேஷ்ட புத்திரத் துரோகிக்கு மகன் செய்யும் உபகாரம் அக்கினிக்குச் சம்மதம் இல்லாதது போல வழி மறித்துக்கொண்டது. மேல் மாடியின் பின்புறத்திலிருக்கிற பலகணிகளின் வழியாய் உள்ளே நுழைந்து தகப்பனை வெளிப்படுத்துகிறதென்று மூத்த பிள்ளை நிச்சயித்துக் கொண்டு அந்தப் பலகணிகள் ஒரு தென்னைமர உயரத்திலிருந்தபடியால் இரண்டு பெரிய ஏணிகளைச் சேர்த்துக் கட்டி ஜன்னலுக்கு நேரே நிறுத்தி அவைகளின் வழியாக ஏறி ஜன்னலின் மரக்கம்பிகளை அரிவாளால் வெட்டிப் பிளந்து கொண்டு உள்ளே பிரவேசித்து தகப்பனை மிருதுவாகத் தூக்கி ஜன்னல் வழியாக இறக்கி ஏணியின் மேல் நிறுத்திக் கைலாகு கொடுத்துப் படிப்படியாய் நடத்திக்கொண்டு வந்து பூமியிலே சேர்த்தான். அப்படிச் செய்யாமல் சிறிது நேரம் தாமதப்பட்டிருக்குமானால் தகப்பனுடைய சரீரமும் அவனுடைய ஓர வஞ்சகமும் அவன் இளைய பிள்ளைக்கு எழுதி வைத்த மரண சாசனமும் அக்கினியில் வெந்து படுசூரணமாய்ப் போயிருக்குமென்பது அந்த அக்கினியே சாட்சி. ஒரு காலத்திலும் மூத்த பிள்ளையைத் தொடாமலிருந்த தகப்பன் அன்றையத் தினம் மார்போடு இறுகக் கட்டித் தழுவிச் சொல்லுகிறான்: “என் புத்திர பாக்கியமே! என் குலவிளக்கே!! என் கண்மணியே!!! உன்னைப்போல தர்மிஷ்டர்களும் என்னைப் போலே