பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்‌ மக்கள்‌ செய்திகள்‌

167

ராகிய குவின்டஸ் (Quintus) என்பவரையும் இன்னும் அநேகரையும் கொண்டுவிடும்படி அந்த மூவேந்தர்கள் தீர்மானித்தார்கள். இந்தச் சமாச்சாரம் கேட்டவுடனே சிசரோவும் அவருடைய சகோதரரும் தப்பி ஓட ஆரம்பித்தார்கள். பிறகு சிசரோ தம்முடைய சகோதரனைப் பார்த்து “நான் கடற்கரைக்குப் போய்ப் பிரயாணக் கப்பல் திட்டஞ் செய்கிறேன். நீ வீட்டுக்குப் போய் வழிச் செலவுக்குப் பணம் கொண்டுவா” என்று ஆக்ஞாபித்தார். அந்தப் பிரகாரம் குவின்டஸ் என்பவர் வீட்டுக்குப் போனார். அவர் வீட்டுக்கு வந்திருக்கிற சமாசாரம் தெரிந்து அவரைப் பிடித்துக் கொல்வதற்காக அநேகம் போர்வீரர்கள் வீட்டுக்குள்ளே பிரவேசித்து அவரைத் தேடினார்கள். அவர் அகப்படாதபடி வீட்டுக்குள் ஒரு பக்கத்தில் ஒளிந்துகொண்டார். அந்தச் சேவகர்களுக்கு ஆக்கிரகம் உண்டாகி, அவருடைய மகனைப் பிடித்துத் தகப்பன் ஒளித்திருக்கிற இடத்தைக் காட்டும்படி அந்தப் பிள்ளையை அடித்துப் பலவிதமாக உபத்திரவஞ் செய்தார்கள். தாங்கக் கூடாத உபத்திரவங்களையெல்லாம் அந்தப் பிள்ளையாண்டான் சகித்துக் கொண்டு தகப்பன் ஒளிந்திருந்த இடத்தைக் காட்டாமலிருந்தான். குவின்டஸ் என்பவருக்கு தனது மகன் படுகிற உபத்திரவம் தெரிந்தவுடனே மனஞ் சகியாமல் வெளியே ஓடிவந்து அந்தக் கொலைஞரைப் பார்த்து “நிர்த்தோஷியான அந்தப் பிள்ளையை ஏன் உபாதிக்கிறீர்கள்? என்னைக் கொல்லுங்கள்!” என்று அழுதார். உடனே அவருடைய மகன் “என்னைக் கொல்லுங்கள்! தகப்பனாரைக் கொல்லவேண்டாம்” என்று பிரார்த்தித்தான். அந்தப் பரம சண்டாளர்கள் சற்றும் இரக்கமில்லாமல் தகப்பனையும் மகனையும் ஒரே காலத்தில் வெட்டிக் கொன்றார்கள்.

பெருமையிற் சிறந்த அலெக்சான்றர் (Alexander) என்னும் அரசனுடைய தாயாராகிய ஒலிம்பியாஸ் (Olympias) என்பவள் அதிகாரப் பிரியம் உள்ளவளாய் ராஜரீகக் காரியங்களிர் பிரவேசித்து மகனுக்கு ஓயாத