பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தம்பிக்குத்‌ தீமை செய்த அண்ணன்‌

179

அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. அவர் ஒரு நாள் அதிகாலையில் ஏதோ சில விசாரணை செய்வதற்காக வெளியே போனவர் சூரியாஸ்தமன காலம் வரையில் வீட்டுக்கு வரவில்லை. அவர் திரும்பி வந்தவுடனே எங்களைப் பார்த்து “பெருந் துயரத்துக்குரிய சில சங்கதிகள் இன்று நடந்தன; அவைகளை நினைக்கும் போது எனக்கு மயிர்க்கூச்சிடுகின்றது; மனம் உருகுகின்றது; கண்ணீர் பெருகுகின்றது. அந்தச் சங்கதிகளைச் சொல்லுகிறேன். கேளுங்கள்” என்று சொல்லத் தொடங்கினார்.

“கும்பகோணத்தில் வைசியர் குலத்திலே இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குப் போதுமான பூஸ்திதிகளும் நிதி, நிக்ஷேபம், நகை, பாத்திர முதலிய ஜங்கமங்களும் இருந்தன. அவர்களில் மூத்தவன் பொய் வஞ்சகம் பேராசை முதலிய துர்க்குண புஞ்சமாயும், இளையவன் சற்குண சம்பன்னனாயு மிருந்தார்கள். அவர்களுடைய தகப்பன் லோகாந்தரஞ் சென்ற பிறகு மூத்தவனே குடும்ப வியாபகனாய் மேல் விசாரணை செய்து வந்தபடியால் சகல ஸ்திதிகளும் கணக்குகளும் அவன் கைவசமாகவே இருந்தன. இளையவன் தமையனே கதியென்று நம்பியிருந்தபடியால் தங்களுக்கு இவ்வளவு ஆஸ்தியென்பதுமே இளையவனுக்குப் பரிச்சேதந் தெரியாது. இளையவனுக்குக் கலியாணப் பருவம் வந்து வெகுநாளாகியும் அவனுக்குக் கலியாணஞ் செய்விக்காமல் மூத்தவன் காலங்கடத்தி வந்தான். அவர்களுடைய தாயுடன் பிறந்த அம்மானுக்கு இந்த ஊர் வாசஸ்தலமானபடியால் அவன் மேற்படி இளைய பிள்ளையை இந்த ஊருக்கு வரவழைத்து தன்னுடைய மகளைக் கன்னிகாதானஞ் செய்வித்து மகளையும் மருமகனையும் கும்பகோணத்துக்கு அனுப்பினான். அவர்களுக்கு அன்ன வஸ்திரங் கொடாமல் மூத்தவன் அநாதரவு செய்தபடியால் இளையவன் தமையனைப் பார்த்து ‘“அண்ணா! குடும்ப ஸ்திதிகளில் ஏதாவது தங்களுக்கு இஷ்டமானதைக் கொடுத்தால் நான் எங்கே-