பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

பிரதாப முதலியார் சரித்திரம்

கமா யிருந்தது. அதை ஒரு நாள் அரசன் கண்டு, அந்த வித்துவாளைப் பார்த்து, 'இனிமேல் நீ தாடியில் மயிர் பிடுங்கினால், உன்னைத் தண்டிப்பேன்' என்று உத்தரவு கொடுத்தான். அந்த உத்தரவு வித்துவானுக்குப் பெரிய பிராண சங்கடமா யிருந்தது. சில தினங்களுக்குப் பின்பு, அந்த அரசனுக்கு அந்தக் கல்விமான் ஒரு பெரிய உபகாரம் செய்த படியால், அரசனுக்குச் சந்தோஷ முண்டாகி, அவளைப் பார்த்து, 'நீ என்ன வெகுமதி கேட்டாலும் கொடுக்கச் சித்தமா யிருக்கிறோம். நீ வேண்டிய யதைக் கேள்' என்றான். உடனே அந்த வித்துவான், 'நான் முன் போல், தாடியில் மயிர் பிடுங்க உத்தரவு கொடுக்க வேண்டும். இதைத் தவிர வேறு சம்மானம் வேண்டாம்' என்றான். அரசன் சிரித்துக் கொண்டு, அந்தப் படி உத்தரவு கொடுத்தான். அப்படியே, நீங்களும் உங்களுடைய பண்டிக்காரன் தூங்கி விழும் படி உத்தரவு கொடுக்க வேண்டும்" என்று தேவராஜப் பிள்ளை, அவனுக்குப் பரிந்து பேசினார். அந்தப் படி, நானும் உத்தரவு கொடுத்தேன். அவனும் தூங்கி விழ ஆரம்பித்தான்.



28-ஆம் அதிகாரம்
சகோதர பக்ஷம்—நல்ல சகோதரனும். கெட்ட
சகோதரனும்

தேவராஜப் பிள்ளை யினுடைய பாளையப்பட்டின் எல்லைக் குள்ளாக என்ன குற்றம் நடந்தாலும், அதை விசாரித்துத் தீர்மானிக்கிற அதிகாரம், கவர்மெண்டாரால்