பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேலைக்காரனுக்கு வெகுமதி

177

மாயிருந்தால் அந்தப் படி செய்கிறேன். அது இன்னதென்று சொல்லு“” என்றேன். அவன் “”அது கிரமமா யிருந்தாலும், அக்கிரமாயிருந்தாலும் அகத்தியம் செய்யவேண்டும்”” என்றான். நான் அவனைப் பார்த்து ”“யுக்தா உக்தம் பாராமல் ஒரு காரியத்தையும் வாக்குத் தத்தஞ் செய்யக்கூடாது. அலெக்சான்றர் மகாராஜனிடத்தில் ஒருவன் வந்து ‘மகாராஜாவே! நீங்கள் யார் என்ன கேட்டாலும் ஆக்ஷேபியாமற் கொடுக்கிறீர்களென்கிற பிரக்கியாதி பெற்றிருக்கிறீர்கள்; எனக்கு ஒருகாசு கொடுக்க வேண்டும்’ என்று கேட்டான். உடனே அந்த அரசர் ’அவ்வளவு அற்பப் பொருள்களைக் கொடுப்பது என்னுடைய அந்தஸ்துக்குத் தகாது’ என்றார். அவன், “’அப்படியானால் எனக்கு ஒரு ராஜ்யங் கொடுங்கள்“’ என்றான். இவர் அவனைப் பார்த்து ’அவ்வளவு பெரிய காரியத்தைக் கேட்பது உன்னுடைய அந்தஸ்துக்குத் தகாது’ என்றார். அப்படிப் போல உன்னுடைய அந்தஸ்துக்கும் என்னுடைய அந்தஸ்துக்கும் தக்க காரியத்தை நீ கேட்டுக்கொண்டால் செய்கிறேன்”“” என்றேன் அவன் என்னை நோக்கிச் சொல்லுகிறான்:— “நான் உட்கார்ந் திருக்கும்போதே தூங்கி விழுகிறே னென்று அடிக்கடி என்னைக் கோபிக்கிறீர்கள்; தூக்கத்தை யடக்க என்னாலே சாத்தியப்படவில்லை. நான் சந்தோஷ சமாசாரங் கொண்டுவருவதற்காக நான் கேட்கும் வெகுமானம் ஏதென்றால் நான் தூங்கி விழும்படியாக உத்தரவு கொடுக்க வேண்டும்”“” என்றான். இதைக் கேட்ட வுடனே, எனக்கும் அப்போது கூட இருந்த தேவராஜப் பிள்ளை முதலானவர்களுக்கும் பெரு நகைப்பு வந்துவிட்டது. தேவராஜப் பிள்ளை என்னைப் பார்த்து “”“உங்கள் பண்டிக்கார னுடைய பிரார்த்தனையானது, நான் வாசித்த ஒரு கதையை நினைப்பூட்டுகின்றது”. அஃதென்ன வெனில், ஒரு அரசனுக்கு இஷ்டமாயிர்ந்த ஒரு கல்விமான், அடிக்கடி தன்னுடைய தாடியைத் தடவுவதும், அதில் மயிர் பிடுங்குவதும், வழக்-

12