பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

பிரதாப முதலியார் சரித்திரம்

னுடைய துர்ப்போதனைகளுக்குச் செவி கொடுத்துக் கலெக்டர் என்னுடைய பாளையப்பட்டை ஜப்தியில் வைக்கவேண்டிய முயற்சிகள் செய்து வருகிறார். நான் ஜப்தி செய்யக்கூடாதென்பதற்குள்ள நியாயங்களைக் கண்டு கவர்ன்மெண்டாரவர்களுக்கு விண்ணப்பம் அனுப்பியிருக்கிறேன். அதற்கு அனுகூலமான மறுமொழி கிடைக்குமென்று தினந்தோறும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்; கனகசபை எனக்குப் பிள்ளையல்லவென்றும் கவர்ன்மெண்டாரை வஞ்சிக்கிறதற்காக நான் அவனைப் பிள்ளை போல் பாவிப்பதாகவும் அந்தச் சிரெஸ்ததார் கலெக்டர் முதலான அதிகாரிகளுக்குப் போதித்து வருகிறான். என் தம்பி செய்த மாறுபாடு இவ்வளவு பிரமாதமாய் வந்து விளைந்திருக்கிறது. ஆயினும் சத்தியத்தை அசத்தியம் வெல்லுமா? புண்ணியத்தைப் பாவம் ஜயிக்குமா? சுத்த நிர்த்தோஷியான என்னைக் கடவுள் கைவிடுவாரா? எப்படியும் சில தினங்களுக்குள் கலியாணத்துக்கு உத்தரவு வருமென்று நிச்சயமாக நம்பியிருக்கிறேன். அதுவரையுந் தாங்களிருந்து அந்தக் கலியாணத்தைச் சிறப்பிக்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.” என்றார். அந்தப் பிரகாரம் என் தகப்பனாரும் மாமனாரும் சம்மதித்துப் பயணத்தை நிறுத்தினார்கள். அவர்களுக்கு நடந்த உபசாரங்களும் மரியாதைகளும் அரசர்களுக்குக் கூட நடவா. போக பூமியில் வசிப்பவர்கள் போல் நாங்கள் எங்களுடைய ஊரையுங் கிருகங்களையும் சுத்தமாய் மறந்து விட்டோம்.

இந்த அதிகாரத்தின் துவக்கத்திலே சொல்லியபடி என் தாய் தந்தையரின் வரவைப் பற்றி முந்தி வந்து சமாசாரந் தெரிவித்த அந்த வண்டிக்காரன் மறுபடியும் என்னிடத்தில் வந்து ”“ஐயா! நான் சந்தோஷ சமாசாரந் தெரிவித்ததற்காக நீங்கள் ஒரு வெகுமானமுஞ் செய்யவில்லையே. இப்போது நான் கேட்கிறபடி உத்தரவு செய்யவேண்டும்”” என்று என் காலில் விழுந்து வணங்கினான். ““நீ கேட்கிற காரியம் கிரமமா-